சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 பற்றிய சமீபத்திய செய்திகள்
Posted On:
10 APR 2020 7:42PM by PIB Chennai
காணொலி காட்சி மூலம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் கோவிட்-19 நடவடிக்கைகள் மற்றும் தயார்நிலை மேலாண்மை குறித்து சீராய்வு செய்தார். இதில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரேதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் / சுகாதாரத்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு.அஷ்வினி குமார் சவுபேயும் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்ஷ்வர்தன் பேசுகையில், ‘‘நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோவிட்-19க்காக பிரத்யேகமாக சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளை அடையாளம் கண்டு அறிவிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அதன் மூலம் மிக விரைவாக மக்களிடம் அதைப்பற்றி தெரிவிக்க முடியும். மேலும், சுகாதாரப் பணியாளர்கள் / நிபுணர்கள் தாங்கள் பயன்படுத்த வேண்டிய தனிநபர் பாதுகாப்புக் கருவிகள் குறித்த விரிவான வழிமுறைகள் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mohfw.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான பயன்பாடு தொடர்பாகவும் மாநிலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தனிநபர் பாதுகாப்புக் கருவிகளை மருத்துவமனைகளின் பல்வேறு பகுதிகளில் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு அது https://www.youtube.com/watch?v=LzB5krucZoQ&feature=youtu.beஎன்ற இணையதளத்தில் கிடைக்கிறது’’ என்றார்.
மத்திய அரசு, ‘இந்தியா கோவிட்-19 அவசரக்கால நடவடிக்கை மற்றும் சுகாதார தயார்நிலை தொகுப்பு’க்கு ரூ.15,000 கோடியை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிதியை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், கோவிட்-19ஐ கருத்தில் கொண்டு நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும். மேலும், இது கோவிட்-19 சோதனைகளை அதிகரிக்கச் செய்யும் வசதிகளை பெருக்கவும், தனிநபர் பாதுகாப்புக் கருவிகள் (பிபிஇ) கொள்முதல் செய்யவும், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைககள், ஐசியூ படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ, துணை மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் பயன்படும்.
உள்நாட்டில் 39 உற்பத்தியாளர்கள் சுய பாதுகாப்பு உபகரணத்தை (பிபிஇ) மேம்படுத்தி உள்ளனர். மேலும், தனிநபர் பாதுகாப்புக் கருவிகள் தேவையான அளவுக்கு, அனைத்து மாநிலங்களிலும் உள்ள நமது முதல் நிலை பணியாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
சுமார் 20.4 லட்சம் என்-95 முகக்கவசங்கள் மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. மேலும், எதிர்க்கால தேவையையும் சமாளிக்கத் தேவையான அளவுக்கு அவற்றை கொள்முதல் செய்யும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர 49,000 வெண்டிலேட்டர்கள் வாங்க ஆர்டர் அளிக்கப்பட்டு, எதிர்க்கால தேவைக்காக அவை இருப்பு வைக்கப்பட உள்ளன.
மேலும், உயிரைக்காக்க ரத்த மாற்று சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்காக, ரத்தம் மற்றும் ரத்தம் தொடர்பான உபபொருட்கள் தேவையான அளவுக்கு இருப்பதை உறுதி செய்ய, தன்னார்வலர் ரத்த தானம் மற்றும் ரத்த மாற்று சிகிச்சை தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது பற்றிய விவரங்கள் https://www.mohfw.gov.in/pdf/NBTCGUIDANCEFORCOVID19.pdf என்ற இணையதள முகவரியில் கிடைக்கும்.
மேலும், ஹைராக்சிகுளோரோகுயின் மருந்து தேவைப்படும் அளவாக குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கோடி மாத்திரைகள் (கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள், ஐசியூ நோயாளிகள் மற்றும் உயர் ஆபத்து தொடர்பு கொண்டவர்கள் உட்பட) என்ற அளவைக்காட்டிலும் தற்போது 3.28 கோடி மாத்திரைகள் இருப்பு உள்ளன. இது உள்நாட்டு தேவையை விட 3 மடங்கு அதிகமானதாகும். இதுதவிர 2 முதல் 3 கோடிக்கு மேற்பட்ட மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இணைய வழியில் கர்ப்பக்கால மற்றும் பிரசவ மேலாண்மை பயிற்சிகளை எய்ம்ஸ் மருத்துவமனை அளிக்கிறது. இணையவழி பயிற்சியின் கீழ் அளிக்கப்படும் இந்த பயிற்சிகள் https://www.youtube.com/watch?v=MJwgi1LCu8o&feature=youtu.beஎன்ற இணையதள முகவரியில் கிடைக்கும்.
தற்போதைக்கு, 146 அரசு ஆய்வகங்கள், 67 தனியார் ஆய்வகங்கள் ஆகியவை 16,000க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வு மையங்கள் மூலம் பரிசோதனை திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதியன்று, சராசரியாக 16,002 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 320 சோதனைகள் (சுமார் 2 சதவீதம்) பாசிட்டீவாக வந்துள்ளன. இருப்பினும், இந்த எண்ணிக்கை, சேகரிக்கப்படும் மாதிரிகள் அடிப்படையில் நாளுக்கு நாள் மாறுபடும்.
தற்போதைக்கு, உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 6,412. இறப்புகள் எண்ணிக்கை 199. 503 பேர் பூரணமாக குணமாகி உள்ளனர் / உடல்நிலை சீராகி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
(Release ID: 1613260)
Visitor Counter : 231
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam