மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கொவிட்-19 ஊரடங்கின் போது டிஜிட்டல் கற்றல் அதிகரிப்பு

Posted On: 09 APR 2020 5:18PM by PIB Chennai

மத்தியப் பல்கலைக்கழகங்கள், ஐஐடிக்கள், ஐஐஐடிக்கள், என்ஐடிக்கள், ஐஐஎஸ்இஆர்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களின் 50 முதல் 65 சதவீத மாணவர்கள் மின்னணு கற்றல் வடிவத்தில் படிப்புகளைத் தொடர்ந்து வருகின்றனர். இணையத் தொடர்பு, இதர தேவையான டிஜிடல் உள்கட்டமைப்பு இல்லாமை  பல விதத்தில் மின்னணு கற்றலில் தடையாக உள்ளது.

இந்தப் பிரச்சினையை ஓரளவுக்கு சமாளிக்கும் வகையில், ஆசிரியர்கள் ஸ்லைடுகள் அல்லது கையால் எழுதப்பட்ட குறிப்புகளைக் கொண்டும், பதிவு செய்யப்பட்ட உரைகள் மூலமும், நேரடி ஒளிபரப்பு வாயிலாகவும் பாடம் நடத்தி வருகின்றனர். இதன் மூலம், கட்டமைப்பு நிச்சயமாகக் கிடைக்காத மாணவர்கள் குறைந்தபட்ச அளவுக்கு இவற்றை அணுக முடியும். பதிவு செய்யப்பட்ட உரைகள் மாணவர்களுக்கு கிடைப்பதன் மூலம் கட்டமைப்பு  இல்லாத நிலை பெரும் தடையாக இருக்கவில்லை. இது தவிர பல உறுப்பினர்கள், ஆன்லைன் உரையாடல் வழியாக மாணவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர்.

மார்ச் 23, 2020 முதல்,  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு மின்னணு கற்றல் தளங்களை இதுவரை இல்லாத அளவுக்கு 1.4 கோடிக்கும் அதிகமானோர் அணுகியுள்ளதைக் காணமுடிகிறது. நேற்று வரை, தேசிய ஆன்லைன் கல்வி தளமான சுவயம், 2.5 லட்சம் தடவை அணுகப்பட்டுள்ளது. இது, மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்ததைப்  போல (50,000 தடவை) ஐந்து மடங்காகும். சுவயம் தளத்தில் கிடைக்கும் 574 படிப்புகளுக்கு ஏற்கனவே, 26 லட்சம் கற்பவர்கள் பதிவு செய்துள்ளதற்கு கூடுதலாக, இது உள்ளது. இதுபோல, சுவயம் பிரபா டிடிஎச் அலைவரிசைகளை தினசரி சுமார் 59,000 பேர் பார்த்து வருகின்றனர். ஊரடங்கு தொடங்கியதிலிருந்து, 6.8 லட்சத்துக்கும் கூடுதலானோர் இதைக் கண்டுள்ளனர்.

அமைச்சகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளும்  இதர டிஜிட்டல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும், தேசிய டிஜிட்டல் நூலகம் சுமார் 1,60,804 முறை அணுகப்பட்டுள்ளது. முன்பு தினசரி 22000 தடவையாக இருந்த அணுக்கம், ஊரடங்கு காலத்தில் 14,51,886ஆக அதிகரித்துள்ளது.

 

 கணினி மற்றும் இணையம் இல்லாத ஏராளமான மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் கற்றலை அமைச்சகம் அளித்து வருகிறது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். சுவயம் பிரபா குழுமத்தின் 32 டிடிஎச் சேனல்கள், ஜிசாட்-15 செயற்கைக்கோள் வழியாக, என்பிடிஇஎல், ஐஐடிக்கள், யுஜிசி, சிஇசி, ஐஜிஎன்ஓயு, என்சிஇஆர்டி, என்ஐஓஎஸ் ஆகியவற்றின் உயர்தரம் வாய்ந்த கல்வி நிகழ்ச்சிகளை 24 மணி நேரமும் ஒளிபரப்பிவருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


(Release ID: 1612887) Visitor Counter : 288