சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

குழந்தையின் பாலினத்தை கருவுறுதலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ தேர்வு செய்வதைத் தடுக்கும், பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் தடை சட்டத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிறுத்தி வைக்கவில்லை

Posted On: 09 APR 2020 7:13PM by PIB Chennai

PC & PNDT எனப்படும் பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம்) 1994 சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஊடகத்தின் ஒரு பிரிவால் ஊகிக்கக்படுகிறது.

குழந்தையின் பாலினத்தை கருவுறுதலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ தேர்வு செய்வதைத் தடுக்கும் பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் தடை சட்டத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நிறுத்தி வைக்கவில்லை என தெளிவுப்படுத்தப்படுகிறது.

கொவிட்-19 பெரும் தொற்று நோயின் காரணமாக அமலில் உள்ள பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு, PC&PNDT விதிகள் 1996இன் கீழ் உள்ள சில நடைமுறைகளை ஒத்தி வைத்து/தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளதாக சுகாதார அமைச்சகம் ஏப்ரல் 4, 2020 அன்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. பரிசோதனை மையங்கள் தங்கள் பதிவைப் புதுப்பிக்க வேண்டிய தேதி பொது முடக்கக் கால கட்டத்தில் இருக்குமானால் அதனை எப்போது புதுப்பித்துக்கொள்வது என்பது பற்றியும், ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் பரிசோதனை மையங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகள் பற்றியும், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் சமர்ப்பிக்கவேண்டிய காலாண்டு வளர்ச்சி அறிக்கையை சமர்ப்பித்தல் தொடர்பாகவும் மட்டுமே விதிகளின் சில பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மீயொலி (அல்ட்ரா சவுன்ட்) சிகிச்சை மையம், மரபணு ஆலோசனை மையம், மரபணு ஆய்வகம், மரபணு சிகிச்சை மையம் மற்றும் படமாக்கல் மையமும், சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அனைத்து கட்டாய அறிக்கைகளையும் தினசரி பராமரிக்க வேண்டும் என மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட தகுந்த அதிகாரிகளிடம் அறிக்கைகளை சமர்ப்பிக்க மட்டுமே காலக்கெடு ஜூன் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. PC&PNDT சட்டத்தின் நடைமுறைகளில் இருந்து (பரிசோதனை மையங்களுக்கு) எந்த விலக்கும் இல்லை.

அனைத்து அறிக்கைகளும் கட்டாயம் ஆகும். அவை விதிகளின் படி பராமரிக்கப்பட வேண்டும். PC&PNDT சட்டம் மற்றும் விதிகளை கடுமையாக அமல்படுத்துவதை இந்த அறிவிக்கை எந்த விதத்திலும் பாதிக்காது.



(Release ID: 1612807) Visitor Counter : 1590