மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் அறிவுரையின் பேரில், ஜேஈஈ மெயின் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களில், தேர்வு மையங்களுக்கான நகரங்களைத் தெரிவு செய்வதில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு வாங்கியுள்ளது, தேசிய தேர்வு முகமை

Posted On: 09 APR 2020 3:56PM by PIB Chennai

தற்போதைய கோவிட் 19 தொற்று சூழ்நிலை காரணமாகவும், ஜேஈஈ மெயின் 2020 தேர்வு எழுத நினைக்கும் விண்ணப்பதாரர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளைக் கருத்தில் கொண்டும், மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுத தெரிவு செய்துள்ள மையங்களை மாற்றிக்கொள்வது உட்பட தங்களது விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால்  நிஷாங்க் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, ஏற்கனவே தேசிய தேர்வு முகமை ஏப்ரல் முதல் தேதி அன்று, வெளியிட்ட பொது அறிவிப்பின்படி, ஜேஈஈ மெயின் 2020 தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்வது குறித்த விவரங்கள் மட்டுமல்லாமல், மாணவர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களை மாற்றி, திருத்தங்களை மேற்கொள்ளவும், தேசிய தேர்வு முகமை வகை செய்திருக்கிறது.

மாணவர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் எந்த தேர்வு மையங்களை தெரிவு செய்கிறார்களோ, அந்த மையங்களை அவர்களுக்கு ஒதுக்க, தேசிய தேர்வு முகமை முயற்சிகளை மேற்கொள்ளும். ஒரு குறிப்பிட்ட நகரத்தில் எந்த அளவிற்கு மாணவர்களை அனுமதிக்க வசதிகள் உள்ளனவோ, அந்த அளவிற்கு மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும். எனினும் நிர்வாகக் காரணங்களினால், வேறொரு நகரமும் ஒதுக்கப்படலாம். தேர்வு மையங்களை ஒதுக்குவது குறித்து, தேசிய தேர்வு முகமையின் முடிவே இறுதியானது.

ஜேஈஈ மெயின் 2020 தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தற்போது இந்த வசதியைப் பயன்படுத்தி தேர்வு மையங்களை மாற்றுத் தேர்வு செய்வது உட்பட வேறு திருத்தங்களை ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் செய்துகொள்ளலாம். இதற்கான இணையதள முகவரி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. https://jeemain.nta.nic . இது தற்போது ஏப்ரல் 14ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பதாரர்கள், இணையதளத்திற்குச் சென்று, தங்களுடைய விவரங்களை உறுதி செய்து, தேவைப்படுகின்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

*ஆன்லைன் விண்ணப்பப் படிவங்களில் உள்ள விவரங்களைத் திருத்துவதற்கான கால அவகாசம் மாலை 5 மணி வரையாகும்.

கட்டணங்களைச் செலுத்துவதற்கான கால அவகாசம் இரவு 11. 50 மணி வரையாகும்.

தேவையான கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் செலுத்த வேண்டியிருந்தால், அதனை வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, பேடிஎம் ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.

விண்ணப்பப் படிவங்களில் செய்த திருத்தங்களின் காரணமாக (கூடுதல்) கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், கட்டணம் செலுத்தப்பட்ட பிறகே, திருத்தியமைக்கப்பட்ட விரங்கள் விண்ணப்பப் படிவத்தில் இடம்பெறும்.

திருத்தங்களை மேற்கொள்வதற்கு வேறு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படமாட்டாது என்பதால் விண்ணப்பதாரர்கள் திருத்தங்களை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், இங்கு கொடுக்கப்பட்டுள்ள இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in

வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 8287471852,8178359845,9650173668,9599676953,8882356803

                                                                                    ****
 



(Release ID: 1612623) Visitor Counter : 169