ரெயில்வே அமைச்சகம்

கொவிட்-19-லிருந்து இந்தியாவைப் பாதுகாப்பதில் ரயில்வே முன்னிலையில் உள்ளது

Posted On: 09 APR 2020 1:33PM by PIB Chennai
கொவிட்-19 பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, இந்திய அரசின் சுகாதார முன்முயற்சிகளுக்கு உறுதுணையாக இந்திய ரயில்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இந்திய ரயில்வே, ஏப்ரல் 7-ம்தேதி வரை, மீண்டும் பயன்படுத்தக்கூடிய 582317 முகக் கவசங்களையும், கை கழுவுவதற்கான 41882 லிட்டர் கிருமி நாசினியையும் தயாரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சரக்கு விநியோகத்தைப் பராமரிப்பதற்கான சரக்கு ரயில் இயக்கத்தை 24 மணி நேரமும் தொடர்ந்து மேற்கொண்டுள்ளதால், ரயில்வேயின் இயக்க மற்றும் பராமரிப்பு ஊழியர்களும் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களது மனவலிமையை ஊக்குவிக்கவும், அனைத்துப் பணியிடங்களிலும் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1. பணிக்கு வரும் அனைத்து ஊழியர்களுக்கும் அகற்றக்கூடிய முகக்கவசங்கள் மற்றும் கைகளைச் சுத்தம் செய்வதற்கான கிருமி நாசினிகள் பணியிடங்களில் வைக்கப்பட்டுள்ளன. 2. சிறந்த ஆரோக்கியத்தைப் பேணும் வகையில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை அனைத்துப் பணியாளர்களும் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். 3. அனைத்துப் பணியிடங்களிலும், சோப்பு, நீர், கை கழுவும் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. 4. சமூக இடைவெளி பராமரிக்கப்படுகிறது.

(Release ID: 1612498) Visitor Counter : 182