அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 நோயாளிகளின் சிகிச்சைக்கான, ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்கும் கருவி தயாரிக்கும் நிறுவனத்துக்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை நிதி

Posted On: 09 APR 2020 10:43AM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) - புனேயில் உள்ள தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் ஆகியவற்றின் தொழில்நுட்பத் தனி உரிமம் பெற்றுள்ள ஜென்ரிச் மெம்ப்ரேன்ஸ் (Genrich Membranes) எனும் நிறுவனத்துக்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் கருவியின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நிதி அளித்து வருகிறது. புதுமையான, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வெற்றிட- நார்ப்பொருள் சவ்வுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அழுத்தத்தின் கீழ் (4-7 கம்பி, எண்ணெய் இல்லாத கம்ப்ரசர் மூலம்), காற்றிலிலுள்ள ஆக்சிஜனின் அளவை 35 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் சவ்வு ஆக்சிஜனரேட்டர் (Membrane Oxygenator Equipment (MOE) எனப்படும் கருவியை தயாரிக்க இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்தக் கருவி மிகவும் பாதுகாப்பானது என்பதுடன், இதனை இயக்குவதற்கு பயிற்சி பெற்ற ஆட்களும் தேவையில்லை. குறைந்த அளவு பராமரிப்பே தேவைப்படும் இந்தக் கருவியை எங்கும் எளிதில் எடுத்துச் செல்லமுடியும். பிளக் வசதி இணைந்துள்ள இது, ஆக்சிஜன் நிறைந்த காற்றை உடனடியாக அளிக்கக்கூடியது. ‘’கொவிட்-19 குறித்த உலக அளவிலான அனுபவத்தின்படி, மருத்துவ முறையில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும் காற்று கொவிட்-19 நோயாளிகள் உள்ளிட்டோருக்கு தேவைப்படுகிறது. தொற்று பாதித்தவர்களில் 14 சதவீதம் பேருக்கு ஏதோ ஒரு வகையிலான சுவாசக்கருவிகள் தேவைப்படுகின்றன. 4 சதவீதம் பேருக்கு மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் பயன்படுத்தப்படும் சுவாசக் கருவிகள் தேவை. , கடுமையான மூச்சுத்திணறல் உள்ள மற்றவர்களைப் பொறுத்த வரையில் இந்தக் கருவி பெரிதும் பயன்படக்கூடியது’’ என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறியுள்ளார். கொவிட்-19 தொற்றின் முக்கிய அறிகுறியான, மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்க அவசர உபகரணங்கள் தேவைப்படும் இந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே அனுப்பப்படும் நோயாளிகளுக்கும் இந்தக் கருவி பயன்படக்கூடும். (மேலும் விவரங்களுக்கு, டாக்டர். ராஜேந்திர கே. காருல் மின்னஞ்சல்: rk.kharul@genrichmembranes.com, தொலைபேசி: 8308822216.

(Release ID: 1612482) Visitor Counter : 151