மத்திய அமைச்சரவை

கொவிட்-19 நிர்வகிக்க நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு செயல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 APR 2020 5:23PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு (2020-21 மற்றும் 2021-22)  செயல்படுத்தாமல்  நிறுத்தி வைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள மோசமான தாக்கத்தையும், சவால்களையும் எதிர்கொள்வதற்கான அரசின் பணிகளை வலுப்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

 


***(Release ID: 1611908) Visitor Counter : 113