பாதுகாப்பு அமைச்சகம்
ஐஎன்எஸ் தீர் கப்பலில் வெளிநாட்டுப் பயிற்சி பணிகளுக்காகச் சென்ற தேசிய மாணவர் படை வீரர்கள் நாடு திரும்பினர்.
இடுகை இடப்பட்ட நாள்:
05 APR 2020 6:41PM by PIB Chennai
தெற்கு கடற்படை கமாண்டோவின் கடற்படைப் பிரிவின், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 14 தேசிய மாணவர் படை வீரர்கள் (என்சிசி காடெட்டுகள்), வெளிநாடுகளில், முதலாவது பயிற்சி பிரிவு - பயிற்சி முடிந்த பிறகு இந்தியக் கடற்படையின் பயிற்சிக் கப்பல் ஐ என் எஸ் தீர் –ல் கொச்சிக்கு திரும்பினார்கள்.
இந்த தேசிய மாணவர் படை வீரர்களுக்கு, கட்டமைக்கப்பட்ட பயிற்சி திட்டத்தின் மூலமாக, கடலில் உள்ள வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்து, குறிப்பாக இந்தியக் கடற்படையின் பணி குறித்து, அதிகபட்ச பயிற்சியளிக்கப்பட்டது. பிப்ரவரி 29 ம் தேதியன்று அன்று அவர்கள் இந்தக்கப்பல் பயிற்சிப் பயணத்தை துவக்கினர். அனைத்து செயல்பாடுகளிலும் வீரர்கள் மிக உற்சாகத்துடன் பங்கேற்றனர். ‘சமுதாயத்தை சென்றடைவது’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த வீரர்கள் மொரீசியசில் போர்ட் லூயி துறைமுகத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் ஆற்றிய சேவையையும், அவர்களின் உற்சாக மனப்பான்மையையும் இல்லத்தில் இருந்தவர்கள், வெகுவாகப் பாராட்டினர். கோவிட் 19 நிலை காரணமாக அவர்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் வரையறைக்குட்பட்டதாக இருந்தன.
மாலத்தீவு, செஷல்ஸ், பங்களாதேஷ், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து இந்த கப்பலில் பயிற்சி பெறுவதற்காக வந்த பயிற்சியாளர்கள், கடற்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்கள், இந்திய கடற்படை அதிகாரிகள் ஆகியோருடன் இந்த தேசிய மாணவர் படை வீரர்கள் மேற்கொண்ட பரிமாற்றங்கள் தேசிய மாணவர் படை வீரர்களுக்கு வெகுவாகப் பயனளிப்பதாக அமைந்தன.
முதலாவது பயிற்சி ஸ்குவாட்ரன் கப்பல்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்வது, உலக அளவிலான கோவிட் 19 தொற்றுநோய் காரணமாகக் குறைக்கப்பட்டு, பயிற்சி கப்பல்கள் அனைத்தும் நாடு திரும்பின. ஐ என் எஸ் தீர், 14 நாட்கள் கடலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த பிறகு, ஏப்ரல் 4ம் தேதி அன்று துறைமுகத்தை வந்தடைந்தது.
கப்பலில் உள்ளவர்களிடையே சமூக விலகியிருத்தல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள சிக்கல்களின் காரணமாக, கப்பலில் இருந்த பணியாளர்கள் உட்பட மொத்த கப்பலுமே ஒரு குழுவாகக் கருதப்பட்டு மொத்தமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. கப்பல் குழுவினரும், தேசிய மாணவர் படை வீரர்களும், தற்போது கூடுதலாக 14 நாட்கள் துறைமுகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைபடுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்
(வெளியீட்டு அடையாள எண்: 1611520)
வருகையாளர் எண்ணிக்கை : 172