குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

கொவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் பெரிதும் துணை நிற்கும் எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மையங்கள்

Posted On: 05 APR 2020 2:15PM by PIB Chennai

புதிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக, பல நிலைகளில் தேசம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.) அமைச்சகத்தின் கீழ் உள்ள 18 தொழில்நுட்ப மையங்கள், தன்னாட்சி அமைப்புகள் இதில் பெரும் பங்களித்து வருகின்றன.

சீலிங் செய்யும் மாஸ்க்குகள் மற்றும் மருத்துவ கவுன்கள் தயாரிப்பதற்கான வெப்ப சீலிங்  மெசினை சென்னையைச் சேர்ந்த மத்திய காலணி தயாரிப்பு பயிற்சி நிலையம் (சி.எப்.டி.ஐ.) வாங்கி, நிர்மாணித்துள்ளது. இந்த இயந்திரத்தில் வேலை முடிந்த பிறகு, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஹெல்த் கேர் நிறுவனம் மருத்துவத் துறையின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக நியமனம் பெற்றுள்ளது. இதன் உற்பத்தி 2020 ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கிவிட்டது. மேலும் 2 இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதற்கு சென்னை சி.எப்.டி.ஐ. நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மையம், வென்டிலேட்டர் கருவியின் முதல்நிலை வடிவமைப்பை உருவாக்கி வருகிறது. கொல்கத்தாவில் உள்ள மத்திய டூல் ரூம் மற்றும் பயிற்சி மையம் (சி.டி.டி.சி.) எளிதான, குறைந்த விலையிலான வென்டிலேட்டர் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சாகர் தத்தா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆலோசனையுடன் இந்த முயற்சி நடந்து வருகிறது. முகக் கவச முதல்நிலை சாதனத்தையும் அது உருவாக்கியுள்ளது. ரூ.15 முதல் ரூ.20 என்ற விலையில் மாதத்திற்கு 20,000 சாதனங்களை உற்பத்தி செய்யும் பணியை அது தொடங்கும்.

கன்னோஜில் உள்ள எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மையம் ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினி தயாரிப்பைத் தொடங்கி, பரூக்காபாத்  மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.

மின்சார அளவீட்டு சாதனங்கள் வடிவமைப்பு நிலையம் (ஐடெமி) அயனி அடிப்படையிலான கிருமிநாசினியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஹைதராபாத், புவனேஸ்வர் மற்றும் ஜாம்ஷெட்பூரில் உள்ள எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மையங்கள் 650 கொரோனா மருத்துவப் பரிசோதனை உபகரணத் தொகுப்புகளை உற்பத்தி செய்யத் தொடங்கும்.

ஆந்திராவின் மருத்துவ தொழில்நுட்ப மண்டலமான ஏ.எம்.டி.இசட்.-க்கு 10,000 வென்டிலேட்டர்கள் தேவைப்படுகின்றன.  இதற்கான வடிவமைப்புகளை உருவாக்குவதற்கான வரைபடங்கள் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன.

ராம்நகர் இ.எஸ்.டி.சி. நிறுவனம் IV ஸ்டாண்ட்  வடிவமைத்துள்ளது. மின்னணு சந்தையில் பதிவு செய்வதற்கு கொவிட்-19க்கு எதிரான நடவடிக்கையில் உதவும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் 70 நிறுவனங்கள் சம்மதிக்க வைக்கப்பட்டுள்ளன. இ.எஸ்.டி.சி. விடுதி, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 80 பேர் தங்குவதற்கான இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. பிவாடி எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மையமும், ஜாம்ஷெட்பூர் மையமும் தனிமைப்படுத்தல் மையங்கள் உருவாக்க காலி அறைகளை கொடுக்க முன்வந்துள்ளன.

ஆக்ராவில் உள்ள பி.பி.டி.சி., இந்தூரில் உள்ள ஐ.ஜி.டி.ஆர். ஆகியவை கூட்டாக சேர்ந்து மருத்துவமனைக்குத் தேவையான அலுவலகப் பொருட்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளன. வடிவமைப்பு விவரங்களைத் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மீரட்டில் உள்ள பி.பி.டி.சி. நிறுவனம் முகக்கவச உறைகளை உற்பத்தி செய்து, இலவசமாக அளித்து வருகிறது. ஆக்ராவில் உள்ள சி.எப்.டி.ஐ. நிறுவனம் ஆக்ராவில் உள்ள ராம்சன்ஸ் நிறுவனத்துக்காக மருத்துவ கவுன்களை உற்பத்தி செய்துள்ளது. இந்த நிறுவனம் மூன்று அடுக்குகள் கொண்ட முகக்கவச உறைகளையும் உருவாக்கவுள்ளது.

******(Release ID: 1611327) Visitor Counter : 258