உள்துறை அமைச்சகம்

பிரதமரின் அறிவுறுத்தலின்படி உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியத்துக்கு ரூ.11,092 கோடியை வழங்க அனுமதி

प्रविष्टि तिथि: 03 APR 2020 7:10PM by PIB Chennai

மாநில முதல்வர்களுடன் நேற்று மேற்கொண்ட காணொளிக் காட்சி கலந்துரையாடலின் போது பிரமர் திரு.நரேந்திர மோடி அளித்த உறுதியைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அனைத்து மாநிலங்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக ரூ.11,092 கோடியை வழங்க அனுமதி அளித்துள்ளார்.

மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் முதல் தவணையை அதாவது ரூ.11,092 கோடியை முன்கூட்டியே மத்திய அரசு வழங்கி உள்ளது.  இதன் மூலம் மாநில அரசுகளிடம் கையிருப்பில் போதிய நிதி இருக்கும்.

எதிர்பாராத சர்வதேச நெருக்கடியை, அதாவது உலக சுகாதார நிறுவனம் ”சர்வதேச பெருந்தொற்று நோய்” என அறிவித்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி உள்ள நெருக்கடியை சமாளிக்க மாநிலங்களுக்கு அந்தந்த நேரத்தில் தேவையான உதவிகளை பிரதமரின் தலைமையின் கீழ் மத்திய அரசு அளித்து வருகிறது.

 

*****


(रिलीज़ आईडी: 1611044) आगंतुक पटल : 321
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam