தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கொவிட்-19 குறித்த உண்மைகளை சரிபார்க்கும் பிரிவு செயல்பாட்டுக்கு வந்தது
Posted On:
02 APR 2020 2:13PM by PIB Chennai
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தில்(பி.ஐ.பி) கொவிட்-19 குறித்த உண்மைகளை சரிபார்க்கும் பிரிவினை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பிரிவு இன்றிலிருந்து செயல்படத் துவங்கியுள்ளது. pibfactcheck[at]gmail[dot]com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, பதிலளிக்கப்படும். கொவிட்-19 தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ செய்தியையும் இங்கு பெறலாம். இந்தப் பிரிவு பி.ஐ.பி-யின் தலைமை இயக்குனர் திரு. நிதின் வகாங்கர் தலைமையில் செயல்படுகிறது.
***
(Release ID: 1610345)
Visitor Counter : 166