ரெயில்வே அமைச்சகம்
கொவிட்-19 பொது முடக்கத்தால் ஏற்பட்டிருக்கும் சவால்களுக்கு இடையே அத்தியாவசியப் பொருள்கள், மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்புக்கான முக்கிய சரக்குகள் விநியோகத்துக்காக இந்திய ரயில்வே தனது சரக்குப் பாதைகளை முழுவதும் இயக்கி வருகிறது
Posted On:
02 APR 2020 1:43PM by PIB Chennai
கொவிட்-19 தாக்கத்தின் காரணமாக நடைமுறையில் உள்ள பொது முடக்கத்தால் ஏற்படும் சவால்களுக்கு இடையே, அத்தியாவசியப் பொருள்களை மக்களுக்கு சரியான நேரத்தில் கிடைக்கச் செய்யவும், மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைக்கான முக்கிய சரக்குகள் விநியோகத்துக்காக இந்திய ரயில்வே தனது சரக்குப் பாதைகளை முழுவதுமாக இயக்கி வருகிறது. இதன் மூலம் ரயில்வே, வீடுகள் மற்றும் தொழில்துறையின் தேவைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து வருகிறது.
7195 பெட்டிகளில் உணவு தானியங்கள், 64567 பெட்டிகளில் நிலக்கரி, 3314 பெட்டிகளில் உருக்கு, 3838 பெட்டிகளில் பெட்ரோலியப் பொருள்களை கடந்த 3 நாட்களில் ரயில்வே விநியோகித்துள்ளது.
மார்ச் 30-ந்தேதி, மொத்தம் 37526 பெட்டிகளில் 726 வாரிகளைக் (rakes) கொண்ட பொருள்கள் ஏற்றப்பட்டன. அதில், 25617 பெட்டிகளில், 466 வாரிகளைக் கொண்ட அத்தியாவசியப் பொருள்கள் ( ஒரு பெட்டி 58 முதல் 60 டன் சரக்கைக் கொண்டது) ஏற்றப்பட்டன. இதில், 2252 பெட்டிகளில் 51 வாரிகளைக் கொண்ட உணவு தானியங்களும், 252 பெட்டிகளில் 6 வாரிகளைச் சேர்ந்த சர்க்கரை, 8 பெட்டிகளில் உப்பு, 63 பெட்டிகளில் 2 வாரி பழங்கள், காய்கறிகள், 21628 பெட்டிகளில் 376 வாரி நிலக்கரி, 1414 பெட்டிகளில் 31 வாரி பெட்ரோலியப் பொருள்களும் அடங்கும். இது தவிர, 840 பெட்டிகளில் 19 வாரி உருக்கு, 802 பெட்டிகளில் 18 வாரி உரம் ஆகிய பிற முக்கிய பொருள்களும் ஏற்றப்பட்டன.
மார்ச் 31-ந்தேதி, மொத்தம் 51755 பெட்டிகளில் 1005 வாரிகளைக் கொண்ட பொருள்கள் ஏற்றப்பட்டன. அதில், 33265 பெட்டிகளில், 598 வாரிகளைக் கொண்ட அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றப்பட்டன. இதில், 2600 பெட்டிகளில் 59 வாரிகளைக் கொண்ட உணவு தானியங்களும், 293 பெட்டிகளில் 7 வாரிகளைச் சேர்ந்த சர்க்கரை, 84 பெட்டிகளில் 2 வாரி உப்பு, 84 பெட்டிகளில் 2 வாரி பழங்கள், காய்கறிகள், 28861 பெட்டிகளில் 500 வாரி நிலக்கரி, 1292 பெட்டிகளில் 28 வாரி பெட்ரோலியப் பொருள்களும் அடங்கும். இது தவிர, 1789 பெட்டிகளில் 40 வாரி உருக்கு, 1287 பெட்டிகளில் 31 வாரி உரம் ஆகிய பிற முக்கிய பொருள்களும் ஏற்றப்பட்டன.
ஏப்ரல் 1-ம் தேதி, மொத்தம் 54177 பெட்டிகளில் 545 வாரிகளைக் கொண்ட பொருள்கள் ஏற்றப்பட்டன. அதில், 17805 பெட்டிகளில், 328 வாரிகளைக் கொண்ட அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றப்பட்டன. இதில், 2343 பெட்டிகளில் 54 வாரிகளைக் கொண்ட உணவு தானியங்களும், 210 பெட்டிகளில் 5 வாரிகளைச் சேர்ந்த சர்க்கரை, 42 பெட்டிகளில் 1 வாரி பழங்கள், காய்கறிகள், 14078 பெட்டிகளில் 244 வாரி நிலக்கரி, 1132 பெட்டிகளில் 24 வாரி பெட்ரோலியப் பொருள்களும் அடங்கும். இது தவிர, 685 பெட்டிகளில் 16 வாரி உருக்கு, 761 பெட்டிகளில் 17 வாரி உரம் ஆகிய பிற முக்கிய பொருள்களும் ஏற்றப்பட்டன.
****
(Release ID: 1610311)
Visitor Counter : 169