பாதுகாப்பு அமைச்சகம்
கோவிட்-19க்கு எதிராகப் போராடும் தேசிய கடமையை ஆற்றுவதற்கு ”என்சிசி மாணவர் யோக்தானைப் பயன்படுத்துதல்” திட்டத்தின் கீழ் தன்னார்வ மாணவர்களை தேசிய மாணவர் படை அமைப்பு அனுப்புகிறது.
என்சிசி மாணவர்களுக்கான தற்காலிக வேலைவாய்ப்பு குறித்த நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன
Posted On:
02 APR 2020 10:09AM by PIB Chennai
கோவிட்-19க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் சிவில் அதிகாரிகளுக்கு உதவும் வகையில் ”என்சிசி மாணவர் யோக்தானைப் பயன்படுத்துதல்” திட்டத்தின் கீழ் தேசிய மாணவர் படையினரின் சேவைகளை வழங்குவதற்கு தேசிய மாணவர் படை (NCC) அமைப்பு முன்வந்துள்ளது. இதற்காக தனது தேசிய மாணவர் படையினருக்கான தற்காலிக வேலைவாய்ப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளை தேசிய மாணவர் படை அமைப்பு வெளியிட்டுள்ளது. இவர்கள் நிவாரண நடவடிக்கைகளையும் நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகளையும் விரைவுபடுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
உதவித் தொலைபேசி எண்கள் / அழைப்பு மையங்களை நிர்வகித்தல், நிவாரணப் பொருள்கள் / மருந்துகள் / உணவு / அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவற்றை விநியோகித்தல், சமுதாயத்தினருக்கு உதவுதல், தகவல் தரவு மேலாண்மை மற்றும் வரிசையில் நிற்க வைத்தல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட வேலைகளில் தேசிய மாணவர் படையினர் (NCC) ஈடுபடுவார்கள். வழிகாட்டி நெறிமுறைகளின்படி சட்டம் ஒழுங்கு சூழலை கையாளும் பணியில் அல்லது இராணுவப்பணிகளில் அல்லது நோய்த்தொற்று ஏற்படக்கூடிய இடங்களில் இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.
18 வயதிற்கு மேற்பட்ட சீனியர் பிரிவு தன்னார்வல மாணவர் படையினர் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள். 8 முதல் 20 எண்ணிக்கையிலான மாணவர்கள் சிறு குழுவாக உருவாக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். இவர்கள் நிரந்தரப் பயிற்சி அலுவலர் அல்லது / மற்றும் அசோசியேட் என்சிசி அலுவலரின் கண்காணிப்பின் கீழ் பணியாற்றுவார்கள்.
இத்தகைய தன்னார்வல தேசிய மாணவர் படையினை பணி அமர்த்துவதற்கு மாநில அரசுகள் / மாவட்ட நிர்வாகம் மாநில என்சிசி இயக்குநரகம் மூலம் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இயக்குநரகம் / குரூப் ஹெட்குவார்ட்டர்ஸ் / தனிப்பிரிவு நிலையில் மாநில அரசு / உள்ளூர் சிவில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பணிகள் ஒருங்கிணைக்கப்படும். மாணவர் படையினர் பணிக்காக அனுப்பப்படுவதற்கு முன்பு கள நிலவரங்களும் சொல்லப்பட்டுள்ள நிபந்தனைகளும் அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும்.
(Release ID: 1610201)
Visitor Counter : 187
Read this release in:
Hindi
,
Punjabi
,
Telugu
,
Assamese
,
Gujarati
,
English
,
Marathi
,
Bengali
,
Odia
,
Kannada
,
Malayalam