சுற்றுலா அமைச்சகம்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்கான வலைதளத்தை சுற்றுலா அமைச்சகம் தொடங்கியது
Posted On:
31 MAR 2020 1:09PM by PIB Chennai
மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், இந்தியாவில் தவித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, போர்ட்டல் எனப்படும் வலைவாசல் ஒன்றைத் தொடங்கியுள்ளது. தங்கள் தாய்நாட்டிலிருந்து வெகு தொலைவில் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அரசு தங்களுக்காக அளித்து வரும் சேவைகள் குறித்த தகவல்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ‘Stranded in India’ (‘இந்தியாவில் தவிப்போர்’) என இந்த வலைவாசலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வலைதள முகவரி : http://strandedinindia.com/ https://www.incredibleindia.org/
கொரோனோ வைரஸ் வெகு வேகமாகப் பரவுவதால், உலகம் முழுவதும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை எதிர்நோக்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின், குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகளின் நலனைப் பாதுகாக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, சுற்றுலா அமைச்சகம், தேவைப்படுபவர்களுக்கு உதவ, தொடர் கண்காணிப்பு உட்பட பல்வேறு முயற்சிகளை ஊக்குவித்து வருகிறது.
*******
(Release ID: 1609555)
Visitor Counter : 255
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam