உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
நாட்டின் கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்கு மருத்துவப் பொருட்கள் விநியோகத்தை சரக்கு விமானங்கள் கொண்டு செல்கின்றன; தனியார் விமானங்களும் முக்கிய பொருட்கள் விநியோகத்தை மேற்கொண்டுள்ளன
Posted On:
31 MAR 2020 10:50AM by PIB Chennai
நாட்டின் கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்கு மருத்துவப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக சரக்கு விமானங்கள் மார்ச் 30-ந்தேதி இயக்கப்பட்டன. அதன் விவரங்கள் வருமாறு;
லைப்லைன்-1- ஏர் இந்தியா விமானம் ஏ-320 அதன் மும்பை-புதுதில்லி-பெங்களூரு-மும்பை தடத்தில், 6593 கிலோ இந்துஸ்தான் லேடக்ஸ் நிறுவனம் எச்எல்எல்-லின் மருத்துவ உபகரணங்கள், நாகாலாந்துக்கு சுவாசக் கவசங்கள் ,கேரளா, கர்நாடகத்துக்கான சரக்குகள், மேகாலயாவுக்கு நோய் சிகிச்சைக்கான ஒருவகை எந்திரங்கள், கோவைக்கு ஜவுளி அமைச்சக சரக்குகள் ஆகியவற்றைக் கொண்டு சென்றது.
லைப்லைன்-2- ஹின்டன்- திமாப்பூர்- இம்பால்- கவுகாத்தி தடத்தில் இந்திய விமானப்படை விமானம், எச்எல்எல்-லின் மருத்துவ உபகரணங்களையும், ஷில்லாங்குக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஐசிஎம்ஆர்-ன் மருத்துவ உபகரணங்களையும் கொண்டு சென்றது.
இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ப்ளூ டார்ட் ஆகிய தனியார் விமான நிறுவனங்களும், வர்த்தக அடிப்படையில், விமானங்களை இயக்குகின்றன.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் , சம்பந்தப்பட்ட முக்கியமானவர்களைக் கொண்டு குழு ஒன்றை அமைத்துள்ளது. லைப்லைன் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய இடங்களில் சரக்கு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குவகாத்தி, திப்ருகர், அகர்தலா, அய்ஸ்வால், இம்பால், கோவை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு இந்த மையங்களில் இருந்து சரக்குகள் அனுப்பப்படுகின்றன.
வரிசை
எண்
|
தேதி
|
ஏர்இந்தியா
|
அலையன்ஸ்
|
ஐஏஎப்
|
இண்டிகோ
|
ஸ்பைஸ்ஜெட்
|
இயக்கப்பட்ட மொத்த விமானங்கள்
|
1
|
26.3.2020
|
02
|
-
|
-
|
-
|
02
|
04
|
2
|
27.3.2020
|
04
|
09
|
-
|
-
|
-
|
13
|
3
|
28.3.2020
|
04
|
08
|
-
|
06
|
-
|
18
|
4
|
29.3.2020
|
04 *
|
10 *
|
06 *
|
--
|
-
|
20
|
|
மொத்த விமானங்கள்
|
14
|
27
|
06
|
06
|
02
|
55
|
* லடாக்குக்கு ஏர் இந்தியா, ஐஏஎப் இணைந்து இயக்கம்.
மார்ச் 26 முதல் 29-ந்தேதி வரை கொண்டு செல்லப்பட்ட மொத்த சரக்குகள் 10 டன்கள். இந்தப் பொருட்களில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வேண்டுகோளுக்கு இணங்க அனுப்பப்பட்ட, கொவிட்-19 தொடர்பான எதிர்வினைப் பொருட்கள், நொதிகள், மருத்துவ உபகரணங்கள், சோதனைக் கருவிகள், சுய பாதுகாப்பு கருவிகள், முகக் கவசங்கள், கையுறைகள் மற்றும் எச்எல்எல்-லின் இதர துணைக் கருவிகள் ஆகியவை அடங்கும்.
மருத்துவ சரக்கு விமானங்கள் தொடர்பான பிரத்யேக வலைதளம் ஆரம்பிக்கப்பட்டு ,இயங்கி வருகிறது. இந்த வலைதளம் ஏப்ரல் 1-ம் தேதி முதல், முழுமையாக இயங்கும். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக வலைதளத்தில் இதற்கான இணைப்பு கிடைக்கும்.( www.civilaviation.gov.in).
(Release ID: 1609478)
Visitor Counter : 153