பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமையல் எரிவாயு விநியோகத்தில் பணியாற்றும், வேலை செய்யும் டெலிவரி பாய்கள் இதர பணியாளர்களுக்கு ரூ 5 லட்சம் கருணைத் தொகை - எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் அறிவிப்பு;

இந்த நடவடிக்கைக்கு திரு. தர்மேந்திர பிரதான் வரவேற்பு

Posted On: 30 MAR 2020 5:25PM by PIB Chennai

கோவிட்-19 பாதிப்பாலோ அல்லது தொற்றாலோ, சமையல் எரிவாயு விநியோக பணியில் வேலை செய்யும் பணியாளர்கள், கிடங்கு ஊழியர்கள், மெக்கானிக்குகள் மற்றும் டெலிவரி பாய்கள் போன்றோர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழக்க நேர்ந்தால், அவர்களுக்கு தலா ரூ 5 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கழகம், பாரத் பெட்ரோலிய கழகம், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய  கழகம் ஆகியவை இன்று அறிவித்தன.

அத்தியாவசியத் தேவையான சமையல் எரிவாயுவுக்கு பொது முடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், இந்த சவலான நேரத்தில் வேலை செய்து சமையல் எரிவாயு உருளையை நாடெங்கிலும் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்கு தடையின்றி விநியோகம் செய்வதற்கு பணியாட்கள் தேவைப்படுகிறார்கள்.

எண்ணை நிறுவனங்களின் இந்த முடிவை, பெட்ரோலிய, இயற்கை வாயு மற்றும் எஃகு அமைச்சர், திரு. தர்மேந்திர பிரதான் வரவேற்றுள்ளார். "இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எடுத்துள்ள இந்த மனிதநேய நடவடிக்கையை வரவேற்கிறேன். எங்கள் பணியாளர்கள் இந்த கடினமான நேரத்தில் செய்து வரும் சேவைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நல்லெண்ண நடவடிக்கையாகும். எங்கள் ஊழியர்களின் நலன் மிகவும் முக்கியமானது, இந்த மனிதாபிமான செயல் எங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பு வலையை பலப்படுத்தி, கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு வலு சேர்க்கும்," என்று ஒரு சுட்டுரை பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

                           ******



(Release ID: 1609359) Visitor Counter : 121