சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம்: கோவிட்-19க்கு எதிராகப் போராடி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்குக் காப்பீட்டுத் திட்டம்

Posted On: 29 MAR 2020 5:14PM by PIB Chennai

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கோவிட்-19க்கு எதிராகப் போராடி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்' பின்வரும் விதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது:

 

  1. மொத்தம் 22.12 லட்சம் பொது சுகாதார சேவையாளர்களுக்கு தொண்ணூறு (90) நாட்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு இது காப்பீடு அளிக்கும். இதில் சமுதாய சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவார்கள். கோவிட்-19 பாதித்த நோயாளிளுடன் நேரடியான தொடர்பில் ஈடுபட்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் பரவும் ஆபத்து வாய்ப்பில் இருக்கும் இந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடு வசதி அளிக்கப்படுகிறது. கோவிட்-19 தாக்கி எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டாலும் இந்தக் காப்பீடு கிடைக்கும்.
  2. முன் எப்போதும் சந்தித்திராத சூழ்நிலைகள் காரணமாக, கோவிட் - 19 தொடர்பான பொறுப்புகளில் பணியாற்ற  அழைக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை அலுவலர்கள்/ ஓய்வுபெற்ற / தன்னார்வலர்கள் / உள்ளாட்சி அமைப்புகள் / ஒப்பந்த / தினசரி கூலி அடிப்படையிலான / தற்காலிக / அயல்பணி அடிப்படையில் மாநில / மத்திய அரசு மருத்துவமனைகள் / மத்திய / மாநில / யூனியன் பிரதேச அரசுகள், எய்ம்ஸ் & INI தன்னாட்சி மருத்துவமனைகள் / மத்திய அமைச்சகங்களின் மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைவரும் இதில் சேர்க்கப்படுவார்கள். சுகாதாரம் மற்றும்  குடும்ப நல அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு உட்பட்டு இந்த நேர்வுகளும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படும்.
  3. பயனாளி வேறு எந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவராக இருந்தாலும், அதற்கும் கூடுதலாக, இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்கள் கிடைக்கும்.

*****(Release ID: 1609123) Visitor Counter : 181