பிரதமர் அலுவலகம்

`மான் கி பாத் 2.0'-வில் பிரதர் திரு. மோடி 10வது உரை

முடக்கநிலையை பின்பற்றுமாறு குடிமக்களுக்கு வேண்டுகோள்

Posted On: 29 MAR 2020 2:07PM by PIB Chennai

மான் கி பாத் 2.0'-வில் 10வது உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கடுமையான முடிவுகள் எடுக்க நேர்ந்தமைக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். கோவிட் -19க்கு எதிரான போரில் இதுபோன்ற கடுமையான முடிவுகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றிய பிரதமர், இந்திய மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது முக்கியம் என்று குறிப்பிட்டார். இந்திய மக்கள் ஒன்றுபட்டு கோவிட்-19ஐ விரட்டியடிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

``முடக்கநிலை சூழல் மக்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்கும். இந்த விதிமுறையை கடைபிடிக்காதவர்களுக்குப் பிரச்சினைகள் வரும்'' என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

முடக்கநிலை காரணமாக மக்கள், குறிப்பாக ஏழை மக்கள் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலைகளுக்காக வருந்துவதாகப் பிரதமர் கூறினார். மக்களின் நிலையைப் புரிந்து கொள்வதாகத் தெரிவித்த அவர், இந்தியா போன்ற 130 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போரில், இதைவிட வேறு வழி கிடையாது என்று தெரிவித்தார். உலகில் நடக்கும் விஷயங்களைப் பார்த்தால், இது வாழ்வா சாவா என்ற போராட்ட நேரமாக இருப்பதால், இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று என்று பிரதமர் கூறினார்.

`` Evam Evam Vikar, api tarunha Saadhyate Sukham'' “என்ற பழமொழியை அவர் மேற்கோள் காட்டினார். ``ஒரு நோயும், அதற்கான காரணியும் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்'' என்பது இதன் அர்த்தம். பின்னாட்களில் அது குணப்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டால், சிகிச்சை அளிப்பது கடினமாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே சிறைப்படுத்திவிட்டது என்றார் அவர். ``அறிவுக்கு, விஞ்ஞானத்துக்கு, பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு, பலசாலிகள் மற்றும் பலவீனமானவர்கள் என எல்லோருக்கும் அது சவாலாக உள்ளது. அது எந்த ஒரு நாட்டின் எல்லைக்கும் உட்பட்டதாக இல்லை. மதம் அல்லது பருவநிலை வித்தியாசத்தையும் அது பார்க்கவில்லை'' என்றார் பிரதமர்.

மனித இனத்தையே அழித்துவிட வேண்டும் என்று உறுதிபூண்டிருப்பதைப் போல இந்த வைரஸ் செயல்படுவதால், அதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்ற உறுதியில், மனிதகுலத்தினர் அனைவரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் திரு. மோடி அழைப்பு விடுத்தார். முடக்கநிலை காலத்தை கடைபிடிப்பது மற்றவர்களுக்கு உதவுவதற்கான செயல்பாடு அல்ல; உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்வதற்கான நடைமுறை என்றார் அவர். லட்சுமணன் கோட்டை தாண்டாமல் இருப்பது தனிப்பட்ட முறையிலும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வரக்கூடிய பல காலங்கள் நல்லதாக இருப்பதற்கான கட்டுப்பாடு என்று அவர் தெரிவித்தார்.

பிரச்சினையின் தீவிரம் புரியாத காரணத்தால், சிலர் முடக்கநிலை அமலை மீறி வருகிறார்கள் என்று அவர் கூறினார். முடக்கநிலை உத்தரவை பின்பற்றுமாறு அவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.  இல்லாவிட்டால் கொரோனா வைரஸ் தொற்றை அழிப்பது நமக்கு சிரமம் ஆகிவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். “Aarogyam Param Bhagyam, Swasthyam Sarwaarth Sadhanam”  என்ற பழமொழியை அவர் நினைவுகூர்ந்தார்.  நல்ல ஆரோக்கியம் என்பது மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்ற இதன் அர்த்தத்தை வலியுறுத்திய பிரதமர், உலகில் ஆரோக்கியம் மட்டுமே மகிழ்ச்சிக்கான ஒரே வழி என்று தெரிவித்தார்.



(Release ID: 1609067) Visitor Counter : 209