தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

கோவிட்-19க்கு எதிராக போராடுவதற்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறார் மத்திய தொழிலாளர் அமைச்சர் திரு. சந்தோஷ் கங்க்வார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAR 2020 1:22PM by PIB Chennai

கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, பிரதமரின் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்குவதென மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. சந்தோஷ் கங்க்வார் முடிவெடுத்துள்ளார்.

"கோவிட் 19 ஏற்படுத்தியுள்ளபாதிப்புகளைக் களைய நாம் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் பங்காற்றி வருகிறோம். இந்த தொற்றை எதிர்த்து போராடுவதற்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு எனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதென நான் முடிவெடுத்துள்ளேன்," என அவர் அறிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு விரைந்து செயல்பட்டு, பொது மக்களுக்கு, குறிப்பாக ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு, சரியான மற்றும் தேவையானநிவராண நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

*****.


(வெளியீட்டு அடையாள எண்: 1608843) வருகையாளர் எண்ணிக்கை : 131