வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சரக்குகளின் போக்குவரத்து மற்றும் விநியோகம், தொழிலக உற்பத்தி, அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல் ஆகியவற்றை கண்காணிக்க டிபிஐஐடி கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Posted On: 26 MAR 2020 10:24AM by PIB Chennai

25.3.2020 முதல் 14.4.2020 வரையிலான முழு ஊரடங்கு காலத்தில் சாதாரண மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல், தொழிலக உற்பத்தி, சரக்குகளின் போக்குவரத்து மற்றும் விநியோகம் ஆகியவற்றை நிகழ் நேரத்தில் கண்காணிக்கவும் இதில் பல்வேறு தரப்பினருக்கு ஏற்படும் சிரமங்களைத் தீர்க்கவும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில்  மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையானது (டிபிஐஐடி) கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது. உற்பத்தியை மேற்கொண்டு இருக்கும்போது தொடர்புடைய சரக்கு வாகன இயக்குனர், விநியோகஸ்தர், மொத்த வணிகர் அல்லது மின்னணு வர்த்தக நிறுவனர் ஆகியோர் தங்களுக்கு அந்த சரக்கு தொடர்பான போக்குவரத்திலும் விநியோகத்திலும் மற்றும் மூல வளங்களைத் திரட்டுவதிலும் ஏதேனும் கள அளவிலான சிரமங்கள் ஏற்பட்டால், அதனை இந்த துறைக்கு +91 11 23062487 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது controlroom-dpiit[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கலாம்.

 

தொலைபேசி எண் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும். இந்த விஷயத்தில் தொடர்புடைய பல்வேறு தரப்பினர் தெரிவிக்கும் புகார்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், மாவட்ட  நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கவனத்துக்கும் ஏனைய தொடர்புடைய  ஏஜன்சிகளின்  கவனத்துக்கும் டிபிஐஐடி கொண்டு செல்லும்.

 

******


(Release ID: 1608318) Visitor Counter : 272