மத்திய அமைச்சரவை

முக்கிய மூலப்பொருட்கள் இடைநிலை மருந்துகள் மற்றும் செயல்மிகு மருத்துவ பொருட்களை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிக்க அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAR 2020 4:20PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கீழ்கண்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது:

1) மூன்று மொத்த மருத்துவ பூங்காக்களில் வரும் ஐந்தாண்டுகளில் பொது உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ 3,000 கோடி மதிப்பில் மொத்த மருத்துவ பூங்கா மேம்படுத்துதல் திட்டம்.

2) முக்கிய மூலப்பொருட்கள் / இடைநிலை மருந்துகள் மற்றும் செயல்மிகு மருத்துவ பொருட்களை அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்க ரூ 6,940 கோடி மதிப்பில் தயாரிப்புச் சார்ந்த ஊக்கத்தொகை திட்டம்.


(வெளியீட்டு அடையாள எண்: 1607779) வருகையாளர் எண்ணிக்கை : 352