மத்திய அமைச்சரவை

இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணைய மசோதா 2019-ல் அதிகாரப்பூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது

Posted On: 29 JAN 2020 2:01PM by PIB Chennai

மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணைய (என்சிஐஎம்) மசோதா 2019-ல் அதிகாரப்பூர்வ திருத்தங்களுக்கான யோசனைகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

     இந்திய மருத்துவ முறை கல்வியில் தேவைப்படும் சீர்திருத்தங்களை இந்த உத்தேச மசோதா உறுதிசெய்யும்.  பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்க வெளிப்படைத் தன்மையையும், பதில் சொல்லும் கடமையையும் கொண்டதாக உத்தேச ஆணையம் இருக்கும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்த செலவில் சுகாதார சேவைகளை இந்த ஆணையம் மேம்படுத்தும்.

     கல்வித்தரங்கள், வளர்ச்சி, மதிப்பீடு தொடர்பான செயல்களை இந்த ஆணையம் முறைப்படுத்துவதோடு, இந்திய மருத்துவ முறைக்கான கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தையும் முறைப்படுத்தும். தரமான மருத்துவர்களைப் போதிய அளவு உருவாக்குவதையும், இந்திய மருத்துவ முறையிலான மருத்துவ சேவைகளில் உயர்தரமான நெறிமுறைகள் அமலாக்கப்படுவதையும் உறுதிசெய்து மேம்படுத்துவது என்சிஐஎம் அமைக்கப்படுவதன் நோக்கமாகும். 

 

*****(Release ID: 1600947) Visitor Counter : 33