மத்திய அமைச்சரவை

கடத்தல் தடுப்பில் ஒத்துழைப்பதற்காக இந்தியா-மியான்மர் இடையே கையெழுத்தான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 27 NOV 2019 11:18AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கடத்தல் தடுப்பில் ஒத்துழைப்பதற்காக இந்தியா-மியான்மர் இடையே கையெழுத்தான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்பது உரிய நாட்டுக்கு திருப்பி அனுப்புவது, மீண்டும் உறவினர்களுடன் சேர்ப்பது ஆகியவற்றுக்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

 

ஒப்பந்தத்தின் நோக்கங்கள்:

     மனிதர்கள் கடத்தப்படும் போது அதனைத் தடுப்பது, கடத்தப்படுவோரை மீட்பது, உரிய நாட்டுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது.

     மனிதர்கள் கடத்தப்படுவதை அனைத்து நிலைகளிலும் தடுப்பதற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது.

     கடத்தல்காரர்களுக்கு எதிராக விரைவான விசாரணையையும், தண்டனையையும் உறுதி செய்வது.

     மனிதர்கள் கடத்தப்படுவதைத் தடுக்க பணிக்குழுக்களை / அதிரடி படைப்பிரிவுகளை அமைக்க முயற்சி மேற்கொள்வது.

     கடத்தல்காரர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களைப் பாதுகாப்பான மற்றும் ரகசியமான முறையில் பகிர்ந்து கொள்வது.

     கடத்தப்பட்டவர்களை மீட்கவும், உரிய நாட்டிற்குத் திருப்பி அனுப்பவும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை உருவாக்கி ஏற்பது.



(Release ID: 1593690) Visitor Counter : 156