மத்திய அமைச்சரவை

இந்தியா மாலத்தீவுகள் இடையே கப்பல் போக்குவரத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Posted On: 03 JUL 2019 4:42PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் மாதம் 8-ம் தேதி மாலத்தீவுகளில் பயணம் மேற்கொண்டபோது கையெழுத்தான இந்தியா – மாலத்தீவு இடையே கடல் வழியாகப் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கும் ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது.

 

  இதன்படி, கேரள மாநிலம் கொச்சிக்கும், மாலத்தீவுகள் தலைநகர் மாலே-க்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும், இதனால் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும். மேலும் இந்தியாவுக்கான சுகாதாரச் சுற்றுலா அதிகரிக்கும். கல்வி நோக்கங்களுக்காக பெரும் எண்ணிக்கையில் மாலத்தீவைச் சேர்ந்தவர்கள், இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

-----


(Release ID: 1576899) Visitor Counter : 188