மத்திய அமைச்சரவை
இந்தியாவுக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையில் சட்டபூர்வ எடை அளவியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
12 JUN 2019 8:08PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும் கிர்கிஸ்தானுக்கும் இடையில் சட்டபூர்வ எடை அளவியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜூன் 13-14, 2019ல் நடைபெறும் SCO நிகழ்வின் போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
பயன்கள்:
- உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் இடையே பரஸ்பர வணிகத் தீர்வு செய்யப்படுவதை எடை அளவியல் சார்ந்து கண்காணிப்பதில் உள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது ஆகியவை இதன் மூலம் நடைபெறும்
- சட்டபூர்வ எடை அளவியல் தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களைப் பரிமாற்றம் செய்து கொள்வது;
- சட்டபூர்வ எடை அளவியல் விஷயங்களைக் கையாளும் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அல்லாதவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்குதல்;
- சட்டபூர்வ எடை அளவியல் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்காக அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களைப் பரிமாற்றம் செய்து கொள்வது.
- பரஸ்பர நலன்களைக் கருத்தில் கொண்டு நடைபெறும் பொருத்தமான கருத்தரங்குகள், பயிலரங்குகள், கூட்டங்கள், இணைப்பு கற்றல் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பது;
- முன்னரே பேக்கேஜ் செய்யப்பட்ட சரக்குகளுக்கான தேவைகள் பட்டியலை உருவாக்குதல் மற்றும் முன்னரே பேக்கேஜ் செய்த சரக்குகள் மீது அரசு எடை அளவியல் கண்காணிப்பை செயல்படுத்துதல்;
- முன்னரே பேக்கேஜ் செய்த சரக்குகள் குறித்த விதிகள்/ ஒழுங்குமுறைகள் அமலாக்கத்தின் நிலையை ஆய்வு செய்தல்;
(Release ID: 1574241)
Visitor Counter : 149