கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவின் சர்வதேசப் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்ட ‘ஸ்கைலார்க்’ என்ற கிர்கிஸ் திரைப்படத்தின் இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான நர்கிசா டோட்டியேவா, தயாரிப்பாளர் குல்னாரா கஸ்மாம்பேடோவா ஆகியோர் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர். கிர்கிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள பட்கென் பிராந்தியத்தில், சோவியத் யூனியனுக்குப் பிந்தைய எல்லைப் பிரிப்புகளால் சமூகங்கள் பிரிந்த எதார்த்தச் சூழலை இப்படம் சித்தரிக்கிறது. தஜிகிஸ்தான் எல்லைக்குள் அமைந்துள்ள தாத்தாவின் கல்லறைக்கு அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்ற பாட்டியின் இறுதி ஆசையை நிறைவேற்றப் போராடும் ஐபெக் என்ற சிறுவனின் உணர்வுப்பூர்வமான பயணத்தை இப்படம் விவரிக்கிறது.
கிர்கிஸ் நாட்டுப்புறக் கதைகளில் அமைதி, நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கருதப்படும் வானம்பாடி பறவையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், 2026 அமுர் ஆட்டம் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளது. மேலும், சோவியத் கால கிர்கிஸ்தானில் ராஜ் கபூர், அமிதாப் பச்சன் திரைப்படங்களும், மிதுன் சக்ரவர்த்தியின் ‘டிஸ்கோ டான்சர்’ பாடல்களும் தங்கள் குழந்தைப் பருவ நினைவுகளில் நீங்கா இடம்பிடித்துள்ளதாகவும், இந்தியத் திரைப்படங்கள் தலைமுறைகளைக் கடந்து அங்குள்ள மக்களிடையே உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341853®=3&lang=1
***
SK/SE/SU