57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா: பனாஜியில் கோவாவின் கலாச்சாரப் பெருமையைப் பறைசாற்றிய வண்ணமயமான ஊர்வலம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 NOV 2026 9:06PMby PIB Chennaiவெளியீட்டு அடையாள எண்: 2342510Views: 12

கோவாவில் நடைபெற்று வரும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு, சினிமாவைக் கொண்டாடும் வகையில் கோவாவின் கலை, கலாச்சாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பிரம்மாண்ட ஊர்வலம் பனாஜி நகரின் தெருக்களில் இன்று நடைபெற்றது. கோவா பொழுதுபோக்குச் சங்க வளாகத்தில் தொடங்கி கலா அகாடமி வரை சென்ற இந்த ஊர்வலத்தில், வண்ணமயமான அலங்கார ஊர்திகள், பாரம்பரியக் கைவினைக்கலைகள், நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.

ஊர்வலத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு மாநில அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். உள்ளூர் மக்களின் திறமைகளை ஊக்குவிப்பதும், பாரம்பரியக் கலைகளைப் பாதுகாப்பதும் அவசியம் என வலியுறுத்திய அவர், பாரம்பரிய விளக்கு தயாரிக்கும் போட்டியில் கோவா மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதைப் பாராட்டினார்.

இந்நிகழ்வில் கோவா பொழுதுபோக்குச் சங்கத் துணைத் தலைவர் திருமதி டெலிலா எம் லோபோ, மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகக் கூடுதல் செயலாளர் திரு பிரபாத், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் திரு ஜி கிருஷ்ணகுமார், மேலாண்மை இயக்குநர் திரு தீரஜ் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341617&reg=3&lang=1   

***

SK/PD/SU


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342510
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026