57-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (ஐஎஃப்எஃப்ஐ), “லதா மங்கேஷ்கர் குறித்த கலந்துரையாடல்: ஆஷா போஸ்லே, எஸ் ஜானகியின் நினைவுகளில் என்றும் எதிரொலிக்கும் குரல்” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில், பிரபல பின்னணிப் பாடகி கே. எஸ். சித்ரா கலந்துகொண்டார். நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான சுஹாசினி மணிரத்னம் நெறியாளராகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், மறைந்த புகழ்பெற்ற பாடகிகளின் இசை, நினைவுகள் குறித்து சித்ரா பகிர்ந்து கொண்டார்.
லதா மங்கேஷ்கரைப் பற்றிப் பேசுகையில், அவரது பாடலில், குறிப்பாக பக்திப் பாடல்களில் உள்ள உணர்ச்சி ஆழத்தை சித்ரா நினைவுகூர்ந்தார். மேலும், தனக்குப் பிடித்தமான லதா மங்கேஷ்கரின் மெல்லிசைகளில் ஒன்றை பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார். ஆஷா போஸ்லேவின் அசாதாரணமான பன்முகத்தன்மை, கஜல்கள் உட்பட பல்வேறு இசை வடிவங்களில் அவர் காட்டும் ஆர்வம் குறித்தும் சித்ரா பேசினார்.
எஸ் ஜானகி குறித்த நினைவுகள் அன்பு நிறைந்ததாக இருந்தன. ஜானகியின் தனித்துவமான குரல், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன், ஒவ்வொரு பாடலுக்கும் உயிர் கொடுக்கும் அவரது ஆற்றல் குறித்து சித்ரா குறிப்பிட்டார். இசைக்கு அப்பால், அவரை ஒரு தாய்க்கு இணையான நபராகவே சித்ரா நினைவுகூர்ந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341450®=3&lang=1
***
SK/BR/PS