பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

ராஜஸ்தான் மாநிலம், பச்சபத்ராவில் உள்ள ஹெச்பிசிஎல் ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலையின் செலவு மற்றும் பங்கு முதலீட்டில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 08 APR 2026 4:21PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ஹெச்பிசிஎல் ராஜஸ்தான் சுத்திகரிப்பு ஆலை லிமிடெட் (HRRL -ஹெச்ஆர்ஆர்எல்) நிறுவனத்தின் திட்டச் செலவை ₹43,129 கோடியிலிருந்து ₹79,459 கோடியாக உயர்த்துவதற்கும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இதில் ₹8,962 கோடி கூடுதல் பங்கு முதலீடு செய்வதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அதிகரிப்புக்குப் பிறகு ஹெச்பிசிஎல்-ன் மொத்த பங்கு முதலீடு ₹19,600 கோடியாக இருக்கும்.

செயல்படுத்தும் உத்திகளும் இலக்குகளும்:

ஹெச்ஆர்ஆர்எல் சுத்திகரிப்பு ஆலை என்பது 26%-க்கும் அதிகமான பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஒரு சுத்திகரிப்பு ஆலையாகும். ஆண்டுக்கு 1 மில்லியன் டன் பெட்ரோல், 4 மில்லியன் டன் டீசல் உற்பத்தியுடன் சேர்த்து, இது ஆண்டுக்கு 1 மில்லியன் டன் பாலிபுரோப்பிலீன், 0.5 மில்லியன் டன் எல்எல்பிடிஇ (லீனியர் லோ டென்சிட்டி பாலிஎதிலீன்), 0.5 மில்லியன் டன் ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎதிலீன்), சுமார் 0.4 மில்லியன் டன் பென்சீன், டோலுயீன், பியூட்டாடையீன் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது. போக்குவரத்து, மருந்து, பெயிண்ட், பேக்கேஜிங் போன்ற துறைகளில் உள்ள நமது எரிசக்தி, தொழில்துறை சூழலுக்கு இந்தத் தயாரிப்புகள் அனைத்தும் முக்கியமானவை. இந்தத் திட்டம் எரிசக்தி தற்சார்புக்கு வழிவகுத்து, பெட்ரோ கெமிக்கல் துறையின் இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கும்.

வேலைவாய்ப்பு உருவாக்கும் ஆற்றல் உள்ளிட்ட பெரும் தாக்கம்:

நாட்டின் அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகள், பெட்ரோலிய வேதிப்பொருட்களின் தேவைகள், சிறப்புப் பொருட்களின் உற்பத்தி ஆகியவற்றில், ஹெச்ஆர்ஆர்எல் ஒரு முக்கியமான திட்டமாகும். இதன் மூலம், இறக்குமதிச் சார்புநிலை குறைக்கப்பட்டு, அந்நியச் செலாவணி சேமிக்கப்படும். மேலும், இத்திட்டம் பின்தங்கிய ஒரு பகுதியின் தொழில்மயமாக்கலுக்கும், உள்நாட்டில் கிடைக்கும் மங்களா கச்சா எண்ணெயைப் பயன்படுத்துவதற்கும் பங்களிப்பதுடன், இந்தியாவை ஒரு சுத்திகரிப்பு மையமாக மேம்படுத்தவும் உதவும். இத்திட்டத்தில் சுமார் 25,000 தொழிலாளர்களுக்கு ஹெச்ஆர்ஆர்எல் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பின்னணி:

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா மாவட்டம், பச்சபத்ராவில் அமைந்துள்ள ஹெச்ஆர்ஆர்எல் (HRRL), ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் (MMTPA) திறன் கொண்ட ஒரு புதிய ஐ, பெட்ரோ கெமிக்கல் நிறுவனமாகும். இது ஆண்டுக்கு 2.4 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டமானது, ஹெச்பிசிஎல் (HPCL) மற்றும் ராஜஸ்தான் அரசு (GoR) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால்  ஹெச்ஆர்ஆர்எல் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஹெச்பிசிஎல்-க்கு 74 சதவீதமும், ராஜஸ்தான் அரசுக்கு 26 சதவீதமும் பங்கு மூலதனம் உள்ளது.

***

(Release ID: 2250035)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2338321) வருகையாளர் எண்ணிக்கை : 7