தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊடகச் சுதந்திரத்துடன் சமூகப் பொறுப்பும் அவசியம் : மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இடுகை இடப்பட்ட நாள்: 16 NOV 2026 5:00PM by PIB Chennai

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் ஊடகங்களுக்குப் பெரும் பங்கு உள்ளது எனவும், கருத்துச் சுதந்திரத்துடன் சமூகப் பொறுப்பையும் ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லியில் இன்று (16.11.2026) நடைபெற்ற தேசிய பத்திரிகை தின விழாவில் பேசிய அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கடந்த 20 ஆண்டுகளில் நிகழ்ந்ததைவிடப் பெரிய தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த மாற்றங்களுக்கு ஏற்ப இளம் பத்திரிகையாளர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், புதிய தொழில்நுட்பங்களைக் கற்று தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பொய்ச் செய்திகள், போலிக் காணொலிகள், தவறான விளம்பரங்கள், டிஜிட்டல் கைது மோசடிகள், குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் தகவல்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த டிஜிட்டல் தளங்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

விழாவில் பேசிய மூத்த பத்திரிகையாளர் ரஜத் சர்மா, பரபரப்பான செய்திகளை வெளியிடுவதைக் காட்டிலும் உண்மையான தகவல்களுக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, தேசியப் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும்போது முழுமையான உண்மைச் சரிபார்ப்பும் நிதானமும் அவசியம் என்றார்.

செயற்கை நுண்ணறிவு, செய்தி சேகரிப்புப் பணிகளுக்கு உதவினாலும், செய்திகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதும் இறுதி முடிவுகளை எடுப்பதும் மனிதர்களின் பொறுப்பாகவே இருக்க வேண்டும் என்று தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் திரு சஞ்சல் குமார் குறிப்பிட்டார்.

பொறுப்பான செய்தி வெளியீடு, உண்மைத் தகவல்கள், தொழில்நுட்ப விழிப்புணர்வு ஆகியவையே எதிர்கால ஊடகத் துறையின் முக்கியத் தேவைகள் என்பதை இந்த விழா வலியுறுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336986&reg=3&lang=1

(Release ID : 2336986)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2337179) வருகையாளர் எண்ணிக்கை : 15