குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தூய்மைப் பணிக்கான விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 8:52PM by PIB Chennai

2025-26-ம் ஆண்டின் சிறந்த தூய்மைப் பணிக்கான விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று வழங்கினார்.  மத்திய வீட்டுவசதி, நகரிய விவகாரங்கள் அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த விருதுகள், இந்தியாவின் தூய்மையான நகரங்களைக் கவுரவிப்பதுடன், நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்திற்கு அவை ஆற்றிய சிறந்த பங்களிப்புகளையும் அங்கீகரிக்கின்றன.

விழாவில் பேசிய  குடியரசுத்தலைவர், தூய்மை இலக்குகளை ஒரு தனி அமைப்பால் மட்டுமே அடைந்துவிட முடியாது என்றும், இதற்கு ஒவ்வொரு குடிமகன், குடும்பம், சமூகம், நகரத்தின் பங்களிப்பும் தேவை என்றும் வலியுறுத்தினார். தூய்மை என்பது பொது இடங்களின் அழகைப் பராமரிப்பது மட்டுமின்றி, நமது ஆரோக்கியம், சமூக உணர்வு, நிர்வாகப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் குறியீடாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இது நமது இல்லங்களில் நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களின் வெளிப்பாடாகவும் அமைகிறது, என்றார் அவர்.

குடிமக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகளை வெறும் ஆய்வுகள் அல்லது தரவரிசைகளுடன் மட்டுப்படுத்தக் கூடாது, மாறாக, இந்தக் கருத்துகள் நகராட்சிச் சேவைகளை மேம்படுத்துவதற்கும், உள்ளூர்ச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஒரு முக்கியமான கருவியாகப் பயன்பட வேண்டும் என்று திருமதி முர்மு தெரிவித்தார். இரண்டு  மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், மிக வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மையங்களாக விளங்குவதால், அவற்றின் திறன்களை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குடியரசுத்தலைவர், இந்த நகரங்களுக்கெனத் தனித்துவமான தேவைகளும் சவால்களும் உள்ளதாகக் குறிப்பிட்டார். இதனால், இவற்றின் முன்னேற்றம், அந்தந்த நகரங்களுக்கே உரிய சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு தேசிய கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335224&reg=48&lang=2 

***

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335300) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam