இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 10:22AM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கத்தின் (விபி-ஜி ராம் ஜி) கீழ் தீவனப் பாதுகாப்பு, மேய்ச்சல் நில மேம்பாடு, கால்நடை வளர்ப்புக்கான உள்கட்டமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய ஊரக மேம்பாட்டு துறையும், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையும் இணைந்து அறிவுறுத்தியுள்ளன.
இந்த முன்முயற்சி தீவனப் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், கால்நடை வளர்ப்பு தொடர்பான உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், கால்நடை வளர்ப்பு, பால்வளம் போன்ற பணிகளைச் சார்ந்து உள்ள ஊரகப்பகுதியைச் சேர்ந்த குடும்பங்கள் குறிப்பாக சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள், நிலமற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரவளிக்க ஒரு முழுமையான அரசு சார்ந்த அணுகுமுறையை கையாள்கிறது. இது ஊரக வேலைவாய்ப்பு, சொத்து உருவாக்கம் ஆகியவற்றை கால்நடைத்துறையின் தேவைகளுடன் சீரமைக்க வகை செய்கிறது.
2026 ஜூலை 1 அன்று நடைமுறைக்கு வந்த விபி-ஜி ராம் ஜி சட்டம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்புக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332844®=3&lang=1&_gl=1
***
AD/IR/PS/RJ