ஆயுஷ்
azadi ka amrit mahotsav

வாழ்க்கையின் உண்மையான செழுமை சிறந்த ஆரோக்கியம், நலவாழ்வு ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது – மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 11:51AM by PIB Chennai

தாந்தராஸ் கொண்டாட்டங்களின் போது ஆரோக்கியம், நோய் தடுப்பு, ஆகிய நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய ஆயுஷ், சுகாதாரம், குடும்பநலத் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் கேட்டுக்கொண்டுள்ளார். உண்மையான செழுமை சிறந்த ஆரோக்கியம், நலவாழ்வு ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இப்பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த அமைச்சர் குடும்பங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றவும், நோய்த்தடுப்புக்கு முன்னுரிமை அளிக்கவும் நீடித்த ஆரோக்கியத்திற்கு சிந்தனையுடன் முதலீடு செய்யவும் ஊக்குவித்தார்.

மருத்துவக் கடவுளாகப் போற்றப்படும் தன்வந்திரி இந்தியாவின் பாரம்பரிய வாழ்க்கை மற்றும் ஆரோக்கிய அறிவியலான ஆயுர்வேதத்துடன் நெருங்கியத் தொடர்புடையவர் என்று  கூறியுள்ளார். தனிமனித மற்றும் குடும்பத்தின் செழுமைக்கு ஆரோக்கியம் தான் அடிப்படை என்பது சிந்திக்க இப்பண்டிகை ஒரு வாய்ப்பை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தாந்தராஸ் பண்டிகையின் போது செழுமையின் அடையாளமாக தங்கம், வெள்ளி, வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வாங்கும் வழக்கம் இருப்பினும் சிறந்த ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே பொருள் செல்வம் உண்மையான மதிப்பை அடைகிறது என்பதை நினைவூட்டும் வகையில் இப்பண்டிகை அமைந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். எதிர்கால செழுமையைப் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்படுவதுபோல் அதேபோன்ற ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாதுகாப்பதற்கும் குடும்பத்தினர் பங்களிக்க வேண்டும் என்று திரு ஜாதவ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332382&reg=3&lang=1

***

AD/IR/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333079) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: Khasi , English , Urdu , हिन्दी , Marathi , Nepali , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu