குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு காரணியாக உள்ளது – குடியரசுத் துணைத்தலைவர்

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 2:43PM by PIB Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா  அடைந்துள்ள வளர்ச்சி என்பது சுற்றுச்சூழல் தொடர்பான உறுதிப்பாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பதில்லை என்பதை உணர்த்துவதாகவும் அவை நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் காரணியாக செயல்படுவதாகவும் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில்  உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற  இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி 2026-ன் நிறைவு நாள் அமர்வில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியாவின் சாதனைகளையும், நீடித்த வளர்ச்சிக்கான அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார். அத்துடன், தூய்மை எரிசக்தி நாட்டில் உள்ள குடும்பங்கள், விவசாயிகள் மற்றும் சமூகங்களை மேம்படுத்துவதில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தியாக விளங்குகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

புதைபடிவ எரிபொருளை சார்ந்திருப்பதை குறைக்கும்போது இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சியை அடையுமா என்பது குறித்து எழுப்பப்பட்ட சந்தேகம் தொடர்பாக குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், இந்தியா அதனுடைய சாதனைகள் மூலம் இதுபோன்ற சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளதாக கூறினார்.

இந்தியாவின் புதைபடிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான திறன் 300 ஜிகாவாட்டை கடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சூரியசக்தி உற்பத்தித்திறன் 3 ஜிகாவாட்டுக்கு குறைவாக இருந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் 170 ஜிகாவாட்டுக்கு அதிகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக குடியரசுத் துணைத்தலைவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333027&reg=3&lang=1

***

AD/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333060) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Bengali , Gujarati , Kannada , Malayalam