இடுகை இடப்பட்ட நாள்:
30 JUL 2026 3:21PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியைப் புதுதில்லியில், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். அங்கு நிலவும், வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து அவ்விரு மாநிலங்களிலும் நிலவும் சூழல் குறித்து பிரதமர் அவர்களுடன் விவாதித்தார்.
வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சவால்களைச் சமாளிக்க, மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்று திரு நரேந்திர மோடி கூறினார்.
அனைவரின் நல்வாழ்வுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்வதாகப் பிரதமர் தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
“அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. அம்மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து இந்த மாநிலங்களில் நிலவும் சூழல் குறித்து நாங்கள் பேசினோம். சவால்களைச் சமாளிக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் தொடர்ந்து இணைந்து செயல்படும். அனைவரின் நல்வாழ்வுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்திக்கிறேன்”
----
(Release ID: 2291680)
TV/PLM/GS