தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் அங்கீகார அட்டை பெறுவதற்கான காலக்கெடு நவம்பர் 4 வரை நீட்டிப்பு

57-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா 2026-ல் பங்கேற்கும் ஊடகவியலாளர்கள் அங்கீகார அட்டை பெறுவதற்கான காலக்கெடுவை 2026 நவம்பர் 4 வரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நீட்டித்துள்ளது.

கோவா பனாஜியில் 2026 நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள இத்திருவிழா தொடர்பாக செய்தி சேகரிக்க திட்டமிட்டுள்ள ஊடகவியலாளர்கள், பத்திரிகை தகவல் அலுவலக அங்கீகார அட்டை இணையப்பக்கத்தில் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

தகுதியுடைய ஊடகவியலாளர்கள் திருத்தியமைக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பாக தங்களுடைய பதிவை நிறைவுசெய்து ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்யலாம்.

விசாரணைக்கு iffi.mediadesk@pib.gov.in. என்ற இணையதளம் மூலம் அணுகலாம்.

அங்கீகார அட்டை பெறும் ஊடகவியலாளர்கள் திரைப்படங்களின் திரையிடல், குழு விவாதங்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரைப்படத் தொழில்துறையினருடனான உரையாடல்கள் மற்றும் இதர திரைப்படத் திருவிழா தொடர்பான நடவடிக்கைகளில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள்.

இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் முந்தைய பதிப்பிற்காக   (56-வது) ஏற்கனவே இணையதளத்தில் பதிவுசெய்துள்ள ஊடகவியலாளர்கள் அதே உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப தங்களது ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329363&reg=3&lang=1

***

SS/IR/LDN/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2329437) வருகையாளர் எண்ணிக்கை : 14