இடுகை இடப்பட்ட நாள்:
26 OCT 2026 1:37PM by PIB Chennai
இந்தியாவின் முதலாவது துணைப் பிரதமரும் தகவல் ஒலிபரப்பு அமைச்சருமான தேசிய ஒருங்கிணைப்பின் சிற்பி, இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக 1955-ம் ஆண்டு முதல் ஆகாஷ்வாணி சர்தார் வல்லபாய் படேல் நினைவுச் சொற்பொழிவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்தச் சொற்பொழிவு அவருடைய நீண்டப் பாரம்பரியத்தின் நினைவாக அமைந்துள்ளது.
இந்த மதிப்புமிக்கச் சொற்பொழிவின் 67-வது பதிப்பு 2026 அக்டோபர் 27 அன்று பிற்பகல் 3 மணிக்கு புதுதில்லியில் உள்ள ஆகாஷ்வாணியின் ரங் மாளிகை அரங்கில் நடைபெறுகிறது. இதில் மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் செளகான் சொற்பொழிவாற்ற உள்ளார். இந்தச் சொற்பொழிவுப் பதிவு சர்தார் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31 அன்று இரவு 9.30 மணிக்கு ஆகாஷ்வாணியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பாகும்.
இந்தச் சொற்பொழிவுத் தொடரின் முதலாவது உரையை சுதந்திர இந்தியாவின் முதலாவது கவர்னர் ஜெனரல் பாரத ரத்னா திரு சி ராஜகோபாலாச்சாரி ஆற்றினார். அன்று முதல் பல்வேறு முக்கியத் தலைவர்கள், விஞ்ஞானிகள், வரலாற்றாசிரியர்கள் அந்த மேடையில் உரையாற்றியுள்ளனர். அவர்களில் டாக்டர் ஜாகீர் உசேன், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், திரு மொராஜி தேசாய், டாக்டர் கரண் சிங், டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன், நீதிபதி லீலா சேத், திரு ராம்நாத் கோவிந்த், திரு அருண் ஜெட்லி, திரு அஜித் தோவல், டாக்டர் எஸ் ஜெய்சங்கர், ஜெனரல் பிபின் ராவத், டாக்டர் எஸ் சோமநாத் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2328391®=3&lang=1
***
SS/IR/SM/SH