பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பிரவீன் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2026 6:38PM by PIB Chennai

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் டி64 உயரம் தாண்டுதல் பிரிவில் தமது முந்தைய விளையாட்டு சாதனையை முறியடித்து, அற்புதமான செயல்பாட்டின் மூலம் தங்கப் பதக்கத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்ட பிரவீன் குமாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.10.2026) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பிரவீன் குமார் தமது வெற்றிகளைத் தொடர்வதை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்த சிறப்பான சாதனை அவரது நிலைத்தன்மை, விளையாட்டுத் திறமை, சிறந்து விளங்குவதற்கான அயராத வேட்கை ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, மீண்டும் ஒருமுறை தேசத்தைப் பெருமைப்படுத்திய பிரவீனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

 

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பிரவீன் குமார் தமது வெற்றிகளைத் தொடர்கிறார்!

 

அற்புதமான செயல்பாட்டின் மூலம், ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் தமது முந்தைய விளையாட்டு சாதனையை முறியடித்து, தங்கப் பதக்கத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்த அசாதாரண சாதனை, அவரது நிலைத்தன்மையையும், விளையாட்டுத் திறமையையும் சிறந்து விளங்குவதற்கான அயராத வேட்கையையும் பிரதிபலிக்கிறது. மீண்டும் ஒருமுறை தேசத்தைப் பெருமைப்படுத்திய பிரவீனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி"

 

(Release ID : 2326098)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2326231) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Odia , Malayalam