பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கத்தார் அமீர் - பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு தொலைபேசி அழைப்பு

இரு தலைவர்களும் தங்களது குடிமக்களின் நல்வாழ்வையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUN 2026 10:34PM by PIB Chennai

கத்தார் நாட்டின் இளவரசர் திரு ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானி, பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஜூன் 21 அன்று கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் தொழில் நகரத்தில் நேரிட்ட விபத்தில், இந்தியர்கள் உயிரிழந்ததற்கு கத்தார் இளவரசர்  ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் மீதான அவரது இரங்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கியதற்காகப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

 

இரு தலைவர்களும் தங்களது நாட்டைச் சேர்ந்த குடிமக்களின் நல்வாழ்வையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், பரஸ்பரம் ஆதரவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.

மேற்காசிய நிலவரம் குறித்து விவாதித்தபோது, அமைதிக்கான முயற்சிகளில் கத்தார் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான பங்களிப்பிற்குப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். இந்த முயற்சிகள், அப்பகுதியில் நீடித்த அமைதியையும், நிலைத்தன்மையையும் கொண்டுவரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தங்களது நிலையை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.

இரு தலைவர்களும் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்துவது என  ஒப்புக்கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277308&reg=48&lang=2   

***

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2324917) வருகையாளர் எண்ணிக்கை : 7