நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐடிபிஐ-யில் அரசின் பங்குரிமை தொடர்பான விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 OCT 2026 7:41AM by PIB Chennai

பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும், ஐடிபிஐ-யில் அரசாங்கத்தின் பங்குரிமை தொடர்பான 2003-ம் ஆண்டின் சட்டரீதியான முன்னேற்றங்கள் குறித்து, தகவல்கள் வெளிவந்துள்ளன.

 2003-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களின்போதும், ஐடிபிஐ (ரத்து) சட்டம் - 2003 மீதான நாடாளுமன்ற விவாதத்தின்போதும், அரசின் பங்கு நீர்த்துப்போவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு திருத்தம் முன்மொழியப்பட்டது. ஆனால் அது இறுதியில் நிராகரிக்கப்பட்டது.

 

பின்னர் இந்த விவகாரம், 2018 டிசம்பர் 17 அன்று தில்லி உயர் நீதிமன்றத்தால் ஆராயப்பட்டது. அந்த நீதிமன்றம், ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தபோது, ​​பத்திகள் 41, 42-ல் பின்வருமாறு தீர்ப்பளித்தது:

 

 ஐடிபிஐ லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசு தனது பங்குகளைக் குறைப்பதைத் தடுக்காது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. விவாதத்திற்குப் பிறகு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தில், அறிமுகப்படுத்த முயன்ற திருத்தம் இடம்பெறவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.

 

2003-ம் ஆண்டின் ஐடிபிஐ ரத்துச் சட்டத்தின் வாசகத்தில் எவ்விதக் குழப்பமும் இல்லை. மேலும், ஐடிபிஐ லிமிடெட் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை அரசு குறைப்பதையோ அல்லது விற்பனை செய்வதையோ தடைசெய்யும் எந்தவொரு விதியையும் அச்சட்டத்தில் புகுத்துவதற்கு இடமில்லை.

 

மேற்கூறிய அந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.  ஐடிபிஐ லிமிடெட் நிறுவனத்தில் அரசு தனது பங்கைக் குறைப்பதிலோ அல்லது கைவிடுவதிலோ வாக்குறுதி மீறல் இல்லை.

 

ஐடிபிஐ வங்கியை மாற்றி அமைப்பது தொடர்பான அரசின் கொள்கையானது, நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் உரைகளில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324612&reg=3&lang=1

 

(Release ID : 2324612)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2324661) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Malayalam , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Gujarati