தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கோவா இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஊடக அங்கீகாரம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு: மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2026 2:50PM by PIB Chennai
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ஊடக அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பங்களை சமப்பிப்பதற்கான காலக்கெடுவை அக்டோபர் 17 வரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நீட்டித்துள்ளது.
57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா தலைநகர் பனாஜியில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க திட்டமிட்டுள்ள ஊடகவியலாளர்கள், பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
தகுதியுள்ள ஊடகவியலாளர்கள், நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பதிவு செய்வதற்கான இணையதள முகவரி: https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx
இது குறித்த ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், விண்ணப்பதாரர்கள் iffi.mediadesk@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323797®=3&lang=1
***
(Release ID: 2323797)
TV/SV/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2323873)
வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Punjabi
,
Gujarati
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Telugu
,
Kannada