மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

ஐடிபிஐ வங்கியின் உத்திசார் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 6:30PM by PIB Chennai

ஐடிபிஐ வங்கி இந்திய ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் ஒரு அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கியாகும். மோசமான நிதி நிலைமை காரணமாக, இந்த வங்கிக்குத் தொடர் மூலதனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

தொடக்கத்தில் மத்திய அரசும், பின்னர் ஆயுள் காப்பீட்டுக் கழகமும் இந்த மூலதனத்தை வழங்கின. வராக் கடன்கள், வங்கிக்கு ஏற்பட்ட இழப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2017 மே 5 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி ஐடிபிஐ வங்கியை உடனடித் திருத்த நடவடிகைக்கான கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்து, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

வங்கியின் நிதி நிலைமையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, சில நிபந்தனைகள்,  தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, 2021 மார்ச் 10 தேதியிட்ட கடிதத்தின் மூலம் ரிசர்வ் வங்கி அந்தக் கட்டுப்பாடுகளை நீக்கியது.

இந்தச் சூழலில்தான், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஐடிபிஐ வங்கியின் உத்திசார் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து,ஐடிபிஐ வங்கியில் உள்ள மொத்தப் பங்கு மூலதனத்தில் 60.72%-ஐ ஒரு உத்திசார் வாங்குநருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கு 30.48% ஆகவும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்கு 30.24% ஆகவும் இருக்கும். விற்பனைக்குப் பிறகு மத்திய அரசிடம் 15% பங்கும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம 19% பங்கும் எஞ்சியிருக்கும்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2323468&reg=3&lang=1    

(Release ID: 2323468)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2323617) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati