இடுகை இடப்பட்ட நாள்:
20 JUN 2026 6:53PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலம் பர்பானியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிப்பதாக பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையவும் பிரார்த்தித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமரின் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
"மகாராஷ்டிரா மாநிலம் பர்பானியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த மன வேதனை அளிக்கின்றன. இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த வாடும் குடுத்தினரின் துயரத்தில் பங்கேற்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்: பிரதமர் நரேந்திரமோடி"
----
(Release ID: 2275758)
TV/SV/SH