கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பன் மாநில கூட்டுறவு சங்கங்களில் புதிய தணிக்கை அறிக்கை முறையை மத்திய கூட்டுறவு அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 14 OCT 2026 4:47PM by PIB Chennai

மத்திய கூட்டுறவு அமைச்சகம் வெளிப்படையான, பொறுப்புடைய, நிதி ரீதியாக, வலுவான மற்றும் தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும் கூட்டுறவு துறை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. அதன் ஒரு பகுதியாக, பன் மாநில கூட்டுறவு சங்கங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, நிதிசார் ஒழுக்கம், சிறந்த நிர்வாகத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு பல மாநிலக் கூட்டுறவு சங்கங்கள் (தணிக்கையாளர் அறிக்கை) ஆணை 2026-ஐ கூட்டுறவு அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாப்பதோடு அதிக வெளிப்படைத்தன்மையுடைய தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும் பொறுப்புடைமைமிக்க கூட்டுறவு சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்ட மற்றொரு நடவடிக்கையாக இந்த முறை அமைந்துள்ளது.

பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) சட்டம் 2023-ன் பிரிவு 73(6)-ன் கீழ் பல மாநில கூட்டுறவு சங்கங்களுக்கான தணிக்கை, தரநிலைகளை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை அளிப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323313&reg=3&lang=1

***

TV/IR/SM/SH 


(வெளியீட்டு அடையாள எண்: 2323507) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Malayalam