சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மருத்துவ நிறுவனங்கள் சிகிச்சைக் கட்டணங்களை அனைவரும் காணும் வகையில் காட்சிப்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 OCT 2026 1:05PM by PIB Chennai

மருத்துவ நிறுவனங்கள் தாங்கள் அளிக்கும் சேவைகள், வசதிகள் ஆகியவற்றுக்கான கட்டணங்களை அனைவரும் காணும் வகையில் காட்சிப்படுத்துவதை உறுதிசெய்யுமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளை மத்திய சுகாதார, குடும்பநல அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திருமதி புன்ய சலிலா ஸ்ரீவஸ்தவா அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒழுங்குமுறை விதிமுறைகள் அமல்படுத்தப்படுவதை ஆய்வு செய்யுமாறும், சுகாதாரச் சேவைக் கட்டணங்கள் தொடர்பான தகவல்களை நோயாளிகளும் அவர்களுடைய உதவியாளர்களும் எளிதில் அணுகும் வகையில் தெளிவாக இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சுகாதாரச் சேவைக் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ள மத்திய சுகாதாரத்துறை செயலாளர், சிகிச்சைக் கட்டணங்களைத் தெளிவாக காட்சிப்படுத்துவதன் மூலம் நோயாளிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் சிகிச்சைக்கான செலவுகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப முடிவுகள் எடுக்கவும், மருத்துவச் செலவுகளைத் திட்டமிடவும் உதவிடும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சிறந்த வெளிப்படைத்தன்மை குழப்பங்களையும், கட்டணம் தொடர்பான பிரச்சினைகளையும் தவிர்ப்பதோடு, சுகாதாரச் சேவை அமைப்பின் நம்பிக்கையையும் உறுதிப்பாட்டையும் வளர்க்க உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2322150&reg=48&lang=1]

***

TV/IR/LDN/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2322362) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Bengali , Gujarati , Kannada , Malayalam