பிரதமர் அலுவலகம்
ஜப்பானின் மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மனைவி திருமதி அகீ அபேயுடன் பிரதமர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2026 6:51PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பானின் மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் மனைவி திருமதி அகீ அபே-யை இன்று புதுதில்லியில் சந்தித்து, இந்தியாவுடனான அவரது நீடித்த தொடர்புக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்தியா-ஜப்பான் இடையேயான உறவுகளை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதில், குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றிய சிறந்த நண்பர் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் ஷின்சோ அபே என்று பிரதமர் நினைவு கூர்ந்தார்.
வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் மாநாட்டு மையத்தில், அபே நினைவு வழித்தடத்தின் திறப்பு விழா, இந்தியா-ஜப்பான் நட்புறவில், ஷின்சோ அபேயின் நீடித்த பங்களிப்பிற்குப் பொருத்தமான மரியாதை என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“மறைந்த முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் மனைவி திருமதி அகீ அபே-யை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவுடனான அவரது நீடித்த தொடர்பை ஆழமாக மதிக்கிறேன்.
அபே சான் ஒரு அன்பான நண்பர் மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். அவர் இந்தியா-ஜப்பான் உறவுகளை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தார். வாரணாசியில் உள்ள ருத்ராக்ஷ் மாநாட்டு மையத்தில், நேற்று அபே நினைவு வழித்தடத்தை திறந்து வைத்தது, இந்தியா-ஜப்பான் நட்புறவுக்கு அவர் ஆற்றிய நிலையான பங்களிப்பிற்குப் பொருத்தமான அஞ்சலியாகும்.
***
(Release ID: 2320921)
TV/SV/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2322240)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam