ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உத்தரவாதம் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், 375 பணிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது: மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 OCT 2026 8:29AM by PIB Chennai

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்பு உத்தரவாதம் மற்றும் கிராமப்புற வாழ்வாதார இயக்கச் சட்டத்தின் கீழ், அனுமதிக்கப்பட்ட பணிகளின் பட்டியலை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், அறிவித்துள்ளது. இந்த புதிய ஊரகப் பணி கட்டமைப்பின் கீழ், மொத்தம் 375 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

முந்தைய கட்டமைப்பில் இருந்த 266 பணிகளுடன் ஒப்பிடுகையில், இந்தப் புதிய பட்டியல், 41 சதவீத விரிவாக்கத்தைக் கொண்டுள்ளது. இப்பணிகள் நான்கு முக்கிய கருப்பொருள் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. நீர் பாதுகாப்பு, அடிப்படை ஊரகக் கட்டமைப்பு மேம்பாடு, வாழ்வாதாரம் சார்ந்த கட்டமைப்பு, தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் பேரிடர் தயார் நிலைக்கான சிறப்புப் பணிகள் ஆகியவை இதில் அடங்கும்.

சொத்து வகைகளின் வழக்கமான பட்டியலைக் கடந்து, ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை, நீடித்த ஊரகச் சொத்துக்களின் உருவாக்கம், மதிப்பீடு சார்ந்த வளர்ச்சிக் குறியீடுகளுடன் இணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பணியும், கிராம சபையால் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சியடைந்த கிராம பஞ்சாயத்துத் திட்டத்தின்' கீழ், அடிப்படை நிலையில், திட்டமிட்ட செயல்முறையின் மூலம், இதற்கான  நடவடிக்கைகள் தொடங்கப்படும். மேலும் இப்பணிகள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தேசிய ஊரகக் கட்டமைப்புத் தொகுப்பு மூலம் கண்காணிக்கப்படும்.

நீர் பாதுகாப்பு சார்ந்த பிரிவில் 128 பணிகள் அடங்கியுள்ளன. இது நான்கு வகைப்பாடுகளிலும் அதிக எண்ணிக்கையிலான பணிகளைக் கொண்ட பிரிவாகும். இதில் தடுப்பணைகள், நீரோடைத் தடுப்புகள், நிலத்தடி தடுப்புச் சுவர்கள், நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்புகள், சிறுதுளைக் கிணறுகள், ஆறுகள், ஓடைகளைச் சீரமைத்தல், நீர் தேங்கிய நிலங்களை மீட்டெடுத்தல், வயல்வெளி நீர்ப்பாசனக் கால்வாய்களைப் புதுப்பித்தல் ஆகியவை அடங்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319426&reg=3&lang=1  

***

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2320334) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Malayalam , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu