உள்துறை அமைச்சகம்
அகமதாபாத்தில் ரூ.1,472 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2026 3:33PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (27.09.2026) குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரயில் நிலையத்தில் இருந்து ரூ.1,472 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அத்துடன் நாட்டின் முதல் எல்என்ஜி எரிபொருள் மூலம் இயங்கும் ரயிலையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, இன்று தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மேம்பாட்டுப் பணிகள், இப்பகுதிக்கு பெரிய பயன் அளிக்கும் என்று கூறினார்.
2014-ம் ஆண்டில் திரு நரேந்திர மோடி பிரதமரான பிறகு, ரயில்வே துறையில் பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, ரயில்வே கட்டமைப்பு நவீனமயமாக்கப்பட்டது என்று திரு அமித் ஷா கூறினார். மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து வதோதராவுக்கு நாட்டின் முதல் இரட்டை அடுக்கு நீண்ட தூர கொள்கலன் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார். சரக்கு போக்குவரத்திற்காக நாட்டில் ரயில் பாதைகள் குறைவாகவே உள்ளன எனவும், இரட்டை அடுக்கு சரக்கு ரயில்கள் திட்டம் வெற்றி பெற்றால், சரக்கு ஏற்றிச் செல்லும் திறன் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில்தான் பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், அதிவேக ரயில் அமைப்பு, உயர்தர வசதிகளுடனான ரயில் நிலையங்கள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன என்று திரு அமித் ஷா தெரிவித்தார். அண்மையில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலைத் தொடங்கி வைத்தார் என்றும், இதன் மூலம் இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் நான்கு நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும் அவர் கூறினார். பிரதமராக திரு நரேந்திர மோடி பதவியேற்பதற்கு முன்பு ரயில்வே மின்மயமாக்கல் 30 சதவீதமாக மட்டுமே இருந்தது எனவும், மீதமுள்ள 70 சதவீதம் அவரது பதவிக்காலத்தில் தான் நிறைவடைந்தது என்றும் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2315543®=48&lang=1
****
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2315655)
வருகையாளர் எண்ணிக்கை : 8