வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை இயக்கத்துக்கான ஆயத்தப் பணிகளை மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2026 6:00PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு மனோகர் லால், தூய்மையே சேவை 2026, இயக்கத்திற்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தயார்நிலையை ஆய்வு செய்தார். மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்கள், முதன்மைச் செயலாளர்கள், நகர்ப்புற வளர்ச்சி இயக்குநர்கள் ஆகியோருடன் இன்று (10.09.2026) நடைபெற்ற ஒரு உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்குத் அவர் தலைமை வகித்தார்.

2026 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை நடைபெறவுள்ள நாடு தழுவிய இயக்கத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. 'தூய்மையில் முன்னிலை, தூய்மையான இந்தியா, ஆற்றல்மிக்க இந்தியா' என்ற இந்த ஆண்டின் கருப்பொருள், தூய்மையான, ஆற்றல்மிக்க இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதில் கூட்டுப் பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

கூட்டத்தின் போது, ​​இந்த இயக்கத்தில் முக்கியக் கவனம் செலுத்தப்படும் பகுதிகள், நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விளக்கப்பட்டது. இயக்க காலத்தில் விரிவான மக்கள் பங்கேற்பை உறுதி செய்தல், உள்ளூர் நிலையில் திறம்பட செயல்படுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்தும் விவாதக்கப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308809&reg=3&lang=1

***

SS/PLM/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2313354) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam