கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளுக்கான மின்னணு ஏலத்தை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 SEP 2026 6:26PM by PIB Chennai

பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளுக்கான 8-வது மின்னணு ஏலத்தை இன்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், புது தில்லியில் தொடங்கி வைத்தார்.

பல்வேறு தருணங்களில் பிரதமருக்கு வழங்கப்பட்ட தனித்துவமான நினைவுப் பரிசுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை மக்கள், தொன்மையான பொருட்களை சேகரிக்கும் நபர்கள், நிறுவனங்கள், கலை-கலாச்சார ஆர்வலர்களுக்கு இந்த ஏலம் வழங்குகிறது.

பிரதமரின் நினைவுப் பரிசுகளுக்கான இந்த 8-வது மின்னணு ஏலம், www.pmmementos.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தொடங்கப்படவுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய திரு கஜேந்திர சிங் ஷெகாவத், இந்த ஏலத்தில் மொத்தம் 1,498 நினைவுப் பரிசுகள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளமான, பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார பாரம்பரியத்தை இந்தத் தொகுப்பு பிரதிபலிப்பதாகவும், நாட்டின் கலை மரபுகள், பாரம்பரிய கைவினைத்திறன், கலாச்சார நடைமுறைகள், ஆன்மீக மரபுகள் மற்றும் விளையாட்டு சாதனைகளை வெளிப்படுத்தும் பொருட்கள் இதில் அடங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த நினைவுப் பரிசுகள் சேகரிக்கப்பட்டுள்ளதால், இத்தொகுப்பு ஒரு தனித்துவமான தன்மையைக் கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2310997&reg=3&lang=1

***

(Release ID: 2310997)

TV/SV/SM


(வெளியீட்டு அடையாள எண்: 2312861) வருகையாளர் எண்ணிக்கை : 16